RRR வருதுங்கோ நாங்க ஒதுங்கிக்கிறோம்.. மே மாசத்துக்கு மலையேறிய டான்.. ரிலீஸ் எப்போ தெரியுமா?

சென்னை: சிவகார்த்திகேயனின் டான் மற்றும் ராஜமெளலியின் RRR என இரு படங்களும் ஒரே ரிலீஸ் தேதியை அறிவிக்கும் போதே, டான் திரைப்படத்தின் ரிலிஸ் தேதி மாறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், அதே காரணத்திற்காக டான் படத்தின் ரிலீஸ் தேதியை லைகா நிறுவனம் தள்ளி வைப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

மேலும், புதிய போஸ்டருடன் டான் படத்தின் ரிலீஸ் தேதியை லைகா அறிவித்துள்ளது.

RRR ப்ரமோஷன்

RRR ப்ரமோஷன்

இயக்குநர் ராஜமெளலியின் இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன், ஆலியா பட், ஸ்ரேயா, சமுத்திரகனி, ஒலிவியா மோரிஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள பிரம்மாண்ட திரைப்படமான RRR படத்தின் சென்னை ப்ரமோஷனில் நடிகர் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். அந்த புகைப்படத்தை ஷேர் செய்தே இப்படியொரு அறிவிப்பை லைகா வெளியிட்டுள்ளது.

தள்ளிப் போன டான்

தள்ளிப் போன டான்

நான் சின்ன டானுங்க.. மார்ச் 25ம் தேதி வரது பெரிய டானுங்க என சிவகார்த்திகேயன் தனது டான் படத்தின் ரிலீஸ் தேதியை ஒத்தி வைக்க ஒப்புக்கொண்ட நிலையில், இரண்டு படங்களையும் தனித் தனியாக ரிலீஸ் செய்து கல்லா கட்டலாம் என்கிற தங்களது முடிவு பலித்ததன் காரணமாக லைகா நிறுவனம் சந்தோஷமாக டான் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போன அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மே மாசத்துக்கு மலையேறிய டான்

மே மாசத்துக்கு மலையேறிய டான்

மார்ச் 25ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் RRR பட ரிலீசுக்காக மார்ச்சில் இருந்து ஒரேயடியாக மே மாசத்துக்கு மலையேறியுள்ளது. ஏப்ரல் மாதமும் ஏகப்பட்ட பெரிய டான்கள் தியேட்டரை துவம்சம் பண்ண காத்திருக்கும் நிலையில், நமக்கு ஏம்பா வம்பு என மே மாதம் 13ம் தேதிக்கு ரசிகர்களை என்டர்டெயின் பண்ண முடிவெடுத்துவிட்டார் சிவகார்த்திகேயன்.

Recommended Video

Jr.NTR -கு Time Sense இல்லை Rajamouli Speech in RRR grand Pre-Release event
புரொபஸர்

புரொபஸர்

டெரர் வில்லனாக தமிழ் சினிமாவை கலக்கி வரும் நடிகர் எஸ்ஜே சூர்யா இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி வரும் டான் படத்தில் காலேஜ் புரொபஸராக நடித்துள்ளார். கோட்சூட் மாட்டிக் கொண்டு செம கூலாக அவர் இருக்க அவருக்கு பின்னால் தலையில் கொம்பு வைத்தபடி குறும்புத்தனமாக சிவகார்த்திகேயன் போஸ் கொடுத்துள்ளார். குக் வித் கோமாளி சிவாங்கி, பால சரவணன் என ஏகப்பட்ட வாண்டு மாணவர்கள் போஸ்டரிலேயே அதகளம் செய்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X