ப்ளூ சட்டை வேற போட்டுருக்கேன்.. டான் பட இயக்குநர் செம ரகளை.. ரிலீசுக்கு பிறகு இப்படியொரு ஷோவா?

சென்னை: சமீப காலமாக படம் ரிலீசான பிறகு இயக்குநர், நடிகர்கள் எல்லாம் எதிரிகளாக மாறி வரும் சூழலில் டான் படம் ரிலீசுக்கு பிறகு நடத்தியுள்ள போஸ்ட் ரிலீஸ் இன்ட்ராக்‌ஷனின் புரமோ வீடியோ வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

Recommended Video

Cibi Chakaravarthi Exclusive Interview | Don movie |Filmibeat Tamil

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன், சமுத்திரகனி நடிப்பில் வெளியான டான் படம் கடந்த மாதம் வெளியாகி மிகப்பெரிய வசூல் வேட்டையை நடத்தி இன்னமும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், படக்குழுவினர் மீண்டும் கூடி டான் படத்தை பற்றி பேசும் புதிய முயற்சி வீடியோ ரிலீஸ் குறித்த புரமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

100 கோடி டான்

100 கோடி டான்

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடி வசூலை ஈட்டி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சிவகார்த்திகேயன் இப்படி சைலன்ட்டாக நடித்தால் தான் சாதிக்க முடியும் என விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், அதையெல்லாம் அடித்து நொறுக்கும் அளவுக்கு டான் படத்தில் அப்படி பேசி, கலாட்டா செய்து நடித்தும் தன்னால் 100 கோடி வசூல் வேட்டையை நடத்த முடியும் என நிரூபித்துள்ளார்.

போஸ்ட் ரிலீஸ் பேட்டி

போஸ்ட் ரிலீஸ் பேட்டி

படம் வெளியாவதற்கு முன்னதாக இயக்குநர் ஒரு புறம், ஹீரோ ஒரு புறம், இயக்குநரும் ஹீரோவும் இணைந்து இன்னொரு புறம் என பேட்டியா கொடுத்து படம் சூப்பராக இருக்குன்னு சொல்வாங்க.. ஆனால், படம் வந்து சொதப்பிய பிறகு, போன் நம்பரை கூட மாற்றி விடுவார்கள் என சமீப காலமாக ஏகப்பட்ட பேச்சுக்கள் கோலிவுட்டில் அடிபட்டு வரும் நிலையில், சிவகார்த்திகேயனின் அடுத்த புது முயற்சி ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

டான் ரீயூனியன்

டான் ரீயூனியன்

கல்லூரி படம் என்பதால் மீண்டும் ஒரு ரீயூனியனை போட்டு இருக்கிறார் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி. சிவகார்த்திகேயன், சிபி சக்கரவர்த்தி, எஸ்.ஜே. சூர்யா, பிரியங்கா மோகன், எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் இணை தயாரிப்பாளர் கலையரசு, சிவாங்கி மற்றும் ஆர்ஜே விஜய் உள்ளிட்டோர் கலகலப்பாக டான் படத்தைப் பற்றி பேசும் நிகழ்ச்சி நாளை மாலை 5 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. தற்போது அதுதொடர்பான முன்னோட்டம் வெளியாகி உள்ளது.

ப்ளூ சட்டை பஞ்ச்

சிவகார்த்திகேயன் பேசும் போது சூரியுடன் இணைந்து வித்தியாசமாக பேசியதை பேசி காட்டுகிறார். எஸ்.ஜே. சூர்யா பேசும் போது சம்மர் ட்ரீட்னு சொன்னேன், அது நடந்துடுச்சு என இயக்குநரை பாராட்ட, நான் வேற ப்ளூ சட்டை போட்டுட்டு வந்துட்டேன் என சிபி சக்கரவர்த்தி கொடுக்கும் பஞ்ச் புரமோவிலேயே களைகட்டுகிறது. மொத்த டீமும் நாளைக்கு என்ன ரகளை செய்யப் போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

துபாய் டூர் முடிச்சி வந்துட்டாங்களா

துபாய் டூர் முடிச்சி வந்துட்டாங்களா

சிவகார்த்திகேயனின் டான் படத்தின் ரிலீஸ் மற்றும் சக்சஸ் பார்ட்டியில் கலந்து கொள்ளாமல் துபாயில் இயக்குநர் நெல்சன், கவின் உள்ளிட்ட ஜாலியோ ஜிம்கானா கேங் உடன் டூர் அடித்து வந்த பிரியங்கா மோகன் சென்னைக்கு ஒரு வழியாக திரும்பி விட்டாரா என்று இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர். கூடிய விரைவிலேயே தலைவர் 169 அறிவிப்பு இயக்குநர் நெல்சனிடம் இருந்து வருமா என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X