சிவகார்த்திகேயனுக்கு இப்படி ஆப்பு வைக்க தான் அந்த அழைப்பா?
சென்னை : சிவகார்த்தியகேனை எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் பட விழாவிற்கு அழைத்து பின் அவருக்கு ஆப்பு வைக்கும் அளவுக்கு அறிவிப்பும் வெளியிட்டுள்ளது ஆர்ஆர்ஆர் படக்குழு
புதுமுக டைரக்டர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் டான். பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி, எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.

ரிலீசை அறிவித்த டான்
இந்த படம் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு ரிலீஸ் செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. பிறகு கொரோனா பரவல் காரணமாக ரிலீஸ் தேதியை உறுதி செய்யாமல் இருந்து வந்தது படக்குழு. இந்நிலையில் தற்போத ஜனவரி மாதத்தில் தள்ளிப் போன பல பெரிய படங்கள் பிப்ரவரி மாத ரிலீசிற்கு திட்டமிட்டுள்ளன. இதனால் டான் படத்தின் வசூல் பாதிக்கப்படலாம் என எண்ணிய படக்குழு, படத்தின் ரிலீஸ் தேதியை மார்ச் மாதத்திற்கு தள்ளிவைத்ததுடன், மார்ச் 25 ம் தேதி தியேட்டர்களில் டான் படம் ரிலீசாகும் என இன்று காலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

கொண்டாடிய ரசிகர்கள்
2022 ம் ஆண்டு வெளியாகும் முதல் சிவகார்த்திகேயன் படம் என்பதால் ரசிகர்கள் இதனை கொண்டாடினர். டான் படத்தில் வரும் ஜலபுலஜங்கு பாடல் வீடியோவை அதிகம் பகிர்ந்து, #Sivakarthikeyan என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் டிரெண்டிங் ஆக்கினர். கிட்டதட்ட நாள் முழுவதும் இந்த ஹேஷ்டேக் டிரெண்டிங்கில் இருந்தது.

ஆப்பு வைத்த ஆர்ஆர்ஆர்
இந்நிலையில் டான் படத்திற்கு ஆப்பு வைப்பதை போல், எஸ்.எஸ்.ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படமும் மார்ச் 25 ம் தேதி ரிலீசாகும் என இன்று மாலை அறிவித்துள்ளனர். முதலில் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 7 ம் தேதி ரிலீசாகும் என கூறப்பட்ட ஆர்ஆர்ஆர், பிறகு தள்ளிவைக்கப்பட்டது. ரசிகர்கள் தொடர்ந்து ரிலீஸ் பற்றி கேட்டதால் மார்ச் 18 அல்லது 28 ம் தேதி ரிலீசாகும் என இரண்டு தேதிகளை சொன்னார்கள். இந்த இரு தேதிகளில் ஏதாவது ஒன்றில் தான் ஆர்ஆர்ஆர் ரிலீசாகும் என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கையில் திடீரென மார்ச் 25 ரிலீஸ் என அறிவித்து, ஷாக் கொடுத்துள்ளனர்.

படவிழாவிற்கு அழைத்தது இதுக்கு தானா
கொரோனா ஊடரங்கிற்கு முன்பு சென்னையில் நடந்த ஆர்ஆர்ஆர் ப்ரொமோஷன் விழாவில் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். ஆர்ஆர்ஆர் படம் பற்றி மிகப் பெருமையாக பேசினார். ராஜமெளலியும் சிவகார்த்திகேயன் பற்றி உயர்வாக பேசினார். பட விழாவிற்கு அழைத்து பெருமைபடுத்தி விட்டு, தற்போது சிவகார்த்திகேயனின் டான் படத்திற்கு இப்படி ஒரு ஆப்பை வைத்து விட்டார்களே என டான் படக்குழுவினர் புலம்பி வருகின்றனர்.

டான் எடுபடுமா
ஆர்ஆர்ஆர் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் ரிலீசாக உள்ளது. ராஜமெளலி படம் என்றால் பிரம்மாண்டத்திற்கு சொல்லவா வேண்டும். பிரம்மாண்டம், பாடல், ராம்சரண்-ஜுனியர் என்டிஆரின் ஆக்ஷன் காட்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கும் போது டான் படம் எடுபடுமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











