சிவகார்த்திகேயனின் டான்...படப்பிடிப்பு எப்போது துவங்குது தெரியுமா ?
சென்னை : நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் ரிலீசிற்கு தயாராக உள்ளது. தியேட்டர்கள் திறப்பிற்காக படக்குழு காத்திருக்கிறது. அதே சமயம் ஓடிடி., ரிலீஸ் செய்வது தொடர்பான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.
இதைத் தொடர்ந்து சயின்ஸ் பிக்ஷன் படமான அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். படங்களில் நடிப்பதுடன், படங்களின் தயாரிப்பிலும் பிஸியாக இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன். இவரது சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் வாழ் என்ற படத்தை தயாரிக்கிறது.

லைகா உடன் புதிய கூட்டணி
அத்துடன் லைகா ப்ரொடக்ஷன்ஸ் உடன் இணைந்து, தனது சிவகார்த்திகேயன் ப்ரொடக்ஷன்ஸ் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளதாக இந்த ஆண்டு ஜனவரியில் சிவகார்த்திகேயன் அறிவித்தார். இந்த படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க உள்ளார்.

மாஸான டான் அப்டேட்
இதைத் தொடர்ந்து வீடியோவுடன் படத்தின் அப்டேட்டை வெளியிட்டது படக்குழு. அதில் இந்த புதிய படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும், டாக்டர் படத்தில் ஹீரோயினாக நடித்த பிரியங்கா அருள் மோகன் தான் இந்த படத்திலும் இரண்டாவது முறையாக சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர உள்ளதாகவும் கூறப்பட்டது.

யாரெல்லாம் நடிக்கிறார்கள்
மேலும் இந்த படத்திற்கு டான் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு அறிவித்தது. எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி ஆகியோர் இந்த படத்தில் நடிக்கிறார்கள் என அறிவிக்கப்பட்டது.

லேட்டஸ்ட் அப்டேட் இதுதான்
இந்நிலையில் லேட்டஸ்ட் அப்டேட்டாக டான் படத்தின் இரண்டாம் கட்ட ஷுட்டிங்கை ஜுலை 15 முதல் சிவகார்த்திகேயன் துவங்க உள்ளாராம். இந்த படத்தில் மீண்டும் சிவகார்த்திகேயனுடன் சூரி கூட்டணி அமைப்பதால் காமெடி களைகட்டும் என கூறப்படுகிறது.

ஹிட் கொடுத்த காமெடி காம்போ
ஏற்கனவே வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட படங்களில் சிவகார்த்திகேயன் - சூரி காம்போ காமெடி செம ஹிட் ஆகி உள்ளது. அந்த வரிசையில் டான் படமும் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











