நான் வேணா அரசியல்வாதியாகிடவா.. சிவகார்த்திகேயனுக்கும் அந்த ஆசை வந்துடுச்சா? டான் டிரைலர் ரிலீஸ்!

சென்னை: பீஸ்ட் படத்தின் டிரைலரில் அரசியல் வசனம் இருந்தது போல சிவகார்த்திகேயனின் டான் படத்தின் டிரைலரிலும் அப்படியொரு வசனம் இருப்பது அதற்கு கொடுக்கும் விளக்கமும் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.

லைகா மற்றும் எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, ராதாரவி நடிப்பில் உருவாகி உள்ள டான் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.

சென்னையில் பிரம்மாண்டமாக டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. உதயநிதி ஸ்டாலின் விழாவில் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.

டான் டிரைலர் ரிலீஸ்

டான் டிரைலர் ரிலீஸ்

அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்திலேயே அந்த டிரைலரையும் வெளீயிட்டுள்ளார். கல்லூரி போர்ஷன் மட்டுமின்றி பள்ளி மாணவனாக வரும் சிவகார்த்திகேயன் போர்ஷன் ரசிகர்களுக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் ஆக அமைந்துள்ளது.

யங் சிவகார்த்திகேயன்

யங் சிவகார்த்திகேயன்

தனுஷ், சிம்பு போலவே தன்னாலும் இளமையான ரோலில் நடிக்க முடியும் என்பதை டான் படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். டான் படத்தில் சிவகார்த்திகேயன் பல கெட்டப் சேஞ்ச் செய்து நடித்துள்ளார். பள்ளி மாணவன், கல்லூரி மாணவன் மற்றும் கடைசியாக லாஸ்ட் பென்ச் மாணவன் லைஃப்பில் என்னவாக மாறினார் என்பது தான் டான் படத்தின் கதை என்பது டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது.

பிரியங்கா பின்னிட்டாங்க

பிரியங்கா பின்னிட்டாங்க

டாக்டர் படத்தைத் தொடர்ந்து டான் படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். டாக்டர் படத்தை விட இந்த படத்தில் பிரியங்கா மோகனுக்கு பள்ளி மாணவியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்த நிலையில், தனது நடிப்பை வெளிக்காட்டி உள்ளார். சிவகார்த்திகேயனை பல இடங்களில் பளார் விடும் காட்சிகள் மிரட்டுகின்றன.

எஸ்ஜே சூர்யா கலக்கல்

எஸ்ஜே சூர்யா கலக்கல்

மாநாடு படத்தைத் தொடர்ந்து டான் படத்தில் கல்லூரி பேராசிரியராக எஸ்ஜே சூர்யா கலக்கல் நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். சிவகார்த்திகேயனின் மிரட்டும் காட்சியாகட்டும் கடைசி காட்சியில் ராதாரவிக்கு முன்பாக அப்படியே பல்டி அடித்து பேசும் காட்சிகளில் "தலைவரே" வைப்ரேஷன் வருகிறது.

அரசியல்வாதி ஆகிடவா

அரசியல்வாதி ஆகிடவா

டான்ஸராக ஆகிடவா, பாடலாசிரியராக ஆகிடவா, கேங்ஸ்டர் ஆகிடவா என ஒவ்வொரு காட்சிக்கும் லைஃபில் என்ன ஆகப் போகிறேன் என்பது போல சிவகார்த்திகேயன் பேசும் காட்சிகள் கலக்கலாக இருந்தாலும், கடைசியாக அரசியல்வாதி ஆகிடவா என சிவகார்த்திகேயன் கேட்க, இவருக்கும் அந்த ஆசை வந்து விட்டதா என நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அதற்கு பதிலாக அவரது நண்பர் வேண்டாம்டா பொய் சொல்லணும் என சொல்லி இருப்பது அரசியல்வாதிகளை கண்டிப்பாக கடுப்பாகி விடும் என்றே தோன்றுகிறது.

டிரைலர் வெளியீட்டு விழா

சென்னையில் பிரம்மாண்டமாக டான் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதன் லைவ் வீடியோவை யூடியூபில் படக்குழுவே வெளியிட்டு விட்டனர். சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், சமுத்திரகனி, எஸ்.ஜே. சூர்யா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அனிருத் பிசியாக இருப்பதால் வரவில்லை என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X