காதலர்களுக்கு செம ட்ரீட்… ‘டான்’ ரிலீஸ் குறித்த குட் நியூஸ் !
சென்னை : சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் ரிலீஸ் குறித்து தகவல் கசிந்துள்ளது.
டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.
எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, குக் வித் கோமாளி ஷிவாங்கி, பால சரவணன், ஆர்.ஜே விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

டாக்டர்
இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி வசூலைக் குவித்தது. இத்திரைப்படத்தை அனைத்து தரப்பு மக்களும் கொண்டானார்கள்.

டான்
அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் 'டான்' படத்தில் நடித்து முடித்துள்ளார். லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் இப்படத்தை தயாரித்துள்ளார். டாக்டர் படத்தில் நடித்த பிரியங்கா அருள் மோகன் மீண்டும் இப்படத்தில் ஹீரோயினாக இணைந்திருக்கிறார். இவர்களுடன் குக் வித் கோமாளி சிவாங்கி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏராளமான படங்கள் ரிலீஸ்
கடந்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. டப்பிங் பணிகளும் நிறைவடைந்துள்ளன. தற்போது திரைப்படம் வெளியீட்டுப் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. டிசம்பரில் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் திரைப்படமும், ஜனவரி 7 ஆம் தேதி ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் திரைப்படமும், பொங்கலையொட்டி வலிமை வெளியாகவிருப்பதால் டான் திரைப்படத்தை வெளியிட சரியான நேரத்தை படக்குழுவினர் எதிர்பார்த்துள்ளனர்.

காதல் தினத்தில்
டான் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடித்துள்ளார். இத்திரைப்படம், காமெடி மற்றும் காதல் திரைப்படம் என்பதால் இத்திரைப்படத்தை காதலர் தினத்தில் அதாவது பிப்ரவரி மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக இணையத்தில் தகவல்கள் கசிந்துள்ளன. இப்படத்தில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது.

அயலான்
இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் அயலான். இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ராகுல் ப்ரித் சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











