சிவகார்த்திகேயனின் ஹீரோ அப்டேட் - வெறும் போஸ்டர் மட்டுமே வருதே படம் எப்போ ரிலீஸ்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ திரைப்படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் அக்டோபர் 18ஆம் தேதி மாலை 5 மணியளவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்திற்கு இசை அமைத்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார் மலையாள நடிகை கல்யாணி ப்ரியதர்சன்.

நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் தான் ஹீரோ. கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் கோட்டபாடி ஜெ.ராஜேஷ் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை இயக்குபவர் இரும்புத்திரை திரைப்படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன்.

Sivakarthikeyans Hero 2nd Look Poster Releasing on October 18

நடுவில் ஹீரோ பட தலைப்புக்காக பி.எஸ்.மித்ரன் படக்குழுவுக்கும் தெலுங்கில் ஆனந்த் அண்ணாமலை படக்குழுவுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. .இரு தயாரிப்பு நிறுவனமும் தயாரிப்பாளர் சங்கத்தில் தங்களது படத்தலைப்பை பதிவு செய்திருந்தனர்.

ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தின் கவனக்குறைவு காரணத்தால், இரு படங்களும் பூஜை போட்டு படத்தை ஆரம்பித்த பின்பே இந்த பிரச்சனை வெளியே தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிய, மீண்டும் இரு தயாரிப்பாளர்களும் பேச்சு வார்த்தையை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.

சிவகார்த்திகேயன் ஒருபுறம் ஹீரோ படத்தில் மும்மரமாக நடித்து வர மற்றொரு புறம் சிவகார்த்திகேயன்-ரவிக்குமார் பட வேலைகள் முடக்கி விடப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமாரின் இயக்கம், ஆர்.டி.ராஜா தயாரிப்பு என பிரம்மாண்டமாக ஆரம்பித்த பட வேலைகள் தற்போது முடக்கி வைக்கபட்டிருக்கிறது.

கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, வேலைகாரன், சீமராஜா உள்ளிட்ட படங்கள் வியாபார ரீதியாக தோல்வி அடைந்தன. இதனால் அந்த படத்துக்கே இன்னும் கடனை அடைக்க முடியாமல் ஆர்.டி.ராஜா தவித்து வர, இந்த படத்திற்கு பண முதலீட்டாளர்கள் பணம் தர மறுத்துள்ளனர். இதனால் படபிடிப்பு பாதிப்பு அடைந்து உள்ளது.

தற்போது ஹீரோ படத்திற்கு ஒரு அப்டேட் வந்துள்ளது. ஹீரோ படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் அக்டோபர் 18ஆம் தேதி மாலை 5 மணியளவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்திற்கு இசை அமைத்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார் மலையாள நடிகை கல்யாணி ப்ரியதர்சன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X