Just In
- 10 min ago
தலைவி, குயினுக்கு தடைக்கோரிய வழக்கு.. காரசார விவாதம்.. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!
- 57 min ago
யார்ரா அக்கா ட்ரெஸ் போடுறதுக்கு முன்னாடி ஃபோட்டோ புடிச்சது.. நடிகையை வச்சுசெய்யும் நெட்டிசன்ஸ்!
- 1 hr ago
ரஜினி, அஜித் ஹீரோயின்களுக்கு மட்டும் ஓகேவாகுது.. ஆனா நமக்கு ஓரங்கட்டுதே.. கவலையில் சாயிஷா!
- 1 hr ago
அதென்ன ஸ்டைலிஷ் ரோல்? இயக்குனர் கவுரவ் விளக்கம்!
Don't Miss!
- News
2019ல் அதிகம் தேடப்பட்ட பிரபலங்கள் யார்? லிஸ்ட் வெளியிட்ட கூகுள்.. சர்ப்ரைஸ் முகங்கள் நிறைய
- Lifestyle
ஆண்களே… உங்கள் ஆண்குறியில் ஏற்படும் பிரச்சனைகள் என்னென்ன தெரியுமா?...தீர்வுகளை தெரிந்துகொள்ளுங்கள்…!
- Finance
அமித் ஷா-க்கு தன் சொந்த வீட்டை எழுதி கொடுப்பதாக போராட்டம்! வீட்ட கட்டிக் கொடுங்க இல்ல எடுத்துக்குங்க
- Education
12-வது தேர்ச்சியா? தமிழக அரசில் 580 மேற்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Technology
2019: ரூ.10,000-த்துக்கு கீழ் அதிக விற்பனையான ஸ்மார்ட் போன்கள்
- Automobiles
யமஹா புதிதாக உருவாக்கும் பைக்கை பற்றி உங்களுக்கு தெரியுமா..? தீவிரமாக உருமாறும் டெனெர் 700..!
- Sports
பலம் குறைந்த ஒடிசா - ஹைதராபாத் மோதும் போட்டி.. வெற்றிக்கு போராட இரு அணிகளும் ரெடி!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிவகார்த்திகேயனின் ஹீரோ அப்டேட் - வெறும் போஸ்டர் மட்டுமே வருதே படம் எப்போ ரிலீஸ்
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ திரைப்படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் அக்டோபர் 18ஆம் தேதி மாலை 5 மணியளவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. இந்த படத்திற்கு இசை அமைத்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார் மலையாள நடிகை கல்யாணி ப்ரியதர்சன்.
நம்ம வீட்டு பிள்ளை படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் தான் ஹீரோ. கே.ஜே.ஆர்.ஸ்டூடியோஸ் கோட்டபாடி ஜெ.ராஜேஷ் இந்த படத்தை தயாரித்து வருகிறார். இந்த படத்தை இயக்குபவர் இரும்புத்திரை திரைப்படத்தை இயக்கிய பி.எஸ்.மித்ரன்.

நடுவில் ஹீரோ பட தலைப்புக்காக பி.எஸ்.மித்ரன் படக்குழுவுக்கும் தெலுங்கில் ஆனந்த் அண்ணாமலை படக்குழுவுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்தது. .இரு தயாரிப்பு நிறுவனமும் தயாரிப்பாளர் சங்கத்தில் தங்களது படத்தலைப்பை பதிவு செய்திருந்தனர்.
ஆனால், தயாரிப்பாளர் சங்கத்தின் கவனக்குறைவு காரணத்தால், இரு படங்களும் பூஜை போட்டு படத்தை ஆரம்பித்த பின்பே இந்த பிரச்சனை வெளியே தெரிய வந்துள்ளது. இதற்கிடையில் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிய, மீண்டும் இரு தயாரிப்பாளர்களும் பேச்சு வார்த்தையை தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
சிவகார்த்திகேயன் ஒருபுறம் ஹீரோ படத்தில் மும்மரமாக நடித்து வர மற்றொரு புறம் சிவகார்த்திகேயன்-ரவிக்குமார் பட வேலைகள் முடக்கி விடப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏ.ஆர்.ரகுமான் இசையில் இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமாரின் இயக்கம், ஆர்.டி.ராஜா தயாரிப்பு என பிரம்மாண்டமாக ஆரம்பித்த பட வேலைகள் தற்போது முடக்கி வைக்கபட்டிருக்கிறது.
கடைசியாக சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ, வேலைகாரன், சீமராஜா உள்ளிட்ட படங்கள் வியாபார ரீதியாக தோல்வி அடைந்தன. இதனால் அந்த படத்துக்கே இன்னும் கடனை அடைக்க முடியாமல் ஆர்.டி.ராஜா தவித்து வர, இந்த படத்திற்கு பண முதலீட்டாளர்கள் பணம் தர மறுத்துள்ளனர். இதனால் படபிடிப்பு பாதிப்பு அடைந்து உள்ளது.
தற்போது ஹீரோ படத்திற்கு ஒரு அப்டேட் வந்துள்ளது. ஹீரோ படத்தின் இரண்டாம் லுக் போஸ்டர் அக்டோபர் 18ஆம் தேதி மாலை 5 மணியளவில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
#WeWantHeroUpdate - You asked for it. Here you have it... #HeroSecondLook will release on Friday - 18th of Oct at 5 PM 🔥#Hero @Siva_Kartikeyan @Psmithran @akarjunofficial @AbhayDeol @kalyanipriyan @thisisysr @george_dop @AntonyLRuben @InfinitMaze @dhilipaction @sivadigitalart pic.twitter.com/FJGtIpP0yB
— KJR Studios (@kjr_studios) October 16, 2019
இந்த படத்திற்கு இசை அமைத்து வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகம் ஆகிறார் மலையாள நடிகை கல்யாணி ப்ரியதர்சன்.