காணாமல் போன மிஸ்டர் லோக்கலை கண்டுபிடிப்பாரா ஹீரோ

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இதற்கு முன்பு வெளியான மிஸ்டர் லோக்கல் ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், அடுத்து தான் நடிக்கும் ஹீரோ படத்தை வெற்றி பெறச் செய்யும் முயற்சியில் படு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது.

சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்த புதிதில் வெளியான மெரீனா படம் ஓரளவு வெற்றி பெற்றிருந்தாலும், அதன் பின்னர் அவர் நடிப்பில் வெளியான கேடி பில்லா கில்லாடி ரங்கா, மனங்கொத்தி பறவை, மான் கராத்தே, எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், ரெமோ என அனைத்துமே வெற்றிப்படங்களாக அமைந்தன. அதன்பின்னர் அவர் நடிப்பில் வெளியான வேலைக்காரன் , சீமராஜா, மிஸ்டர் லோக்கல் என தொடர்ந்து அவருடைய படங்கள் அனைத்து சரிவைத் தந்தன.

பொதுவாகவே சிவகார்த்திகேயனின் அனைத்து படங்களுமே குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். காரணம் அவர் எப்போதும் குழந்தைகள் கவரும் விதமாகவே படங்களை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்.

வேலைக்காரன்

வேலைக்காரன்

இதற்கு மாறாக முதன் முறையாக மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக எடுக்கப்பட்ட சிவக்கார்த்திகேயனின் வேலைக்காரன் படம் உணவுத் தொழில் சார்ந்து, சமுதாயம் சார்ந்து எடுத்தபடம். இருந்தாலும் அந்தப் படம் எதிர்பாராத விதமாக மக்களிடம் நல்ல வரவெற்பு பெற்றது.

காமெடி ஹீரோ

காமெடி ஹீரோ

மீண்டும் இதே மாதிரி படம் எடுத்து நடிப்பார் என்று எதிர்பாக்கபட்டது. ஆனால் அவர் முந்தைய படங்களைப் போல் காமெடியுடன் கூடிய ஹீரோயிசம் கலந்த படமாகவே நடிக்க ஆரம்பித்து விட்டார். ஆனால் அது ரசிகர்களிடையே வரவேற்பை பெறவில்லை.

ஜொலிப்பாரா ஹீரோ

ஜொலிப்பாரா ஹீரோ

கடைசியாக நடித்த மிஸ்டர் லோக்கல் படம் ரசிகர்களிடமும் பொதுமக்களிடமும் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால், அடுத்து தான் நடிக்கும் ஹீரோ படத்தை வெற்றி பெறச் செய்யும் முயற்சியில் படு தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த படத்தில் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் நாயகியாக கல்யாணி பிரியதர்சன் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் பாலிவுட் நடிகர் அபய் தியோல், இவானா, ரோபா சங்கர் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ஹீரோ ரிலீஸ் எப்போது

ஹீரோ ரிலீஸ் எப்போது

ஹீரோ படத்தின் படப்பிடிப்பு கடந்த மார்ச் மாதம் தொடங்கி வேகமாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் இந்தப் படம் வரும் டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் மிஸ்டர் லோக்கல் படத் தோல்வியால் சோர்வடைந்துள்ள சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

என்ன கருத்து இருக்கும்

என்ன கருத்து இருக்கும்

இந்தப் படத்தை பி.எஸ்.மித்ரன் இயக்குகிறார். மித்ரனின் முதல் படம் இரும்புதிரை படத்தில் சமுதாயத்தில் பணம் என்னென்ன வழிகளில் திருடப்படுகிறது என்பதை விளக்கமாக காண்பித்தார். அதேபோல இந்த படமும் எதாவது கருத்து உள்ள படம்மாக இருக்க எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X