அன்பின் முன்னே தோற்று நிற்பவனும் ஹீரோ தான்.. ஹீரோ செகண்ட் சிங்கிள் ரிலீஸ்!
Recommended Video
சென்னை: பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ஹீரோ படத்தின் செகண்ட் சிங்கிளான ஹீரோ டைட்டில் டிராக் வெளியாகியுள்ளது.
கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும், அர்ஜுன், அபய் தியோல், இவானா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

மால்ட்டோ கித்தாப்புலே
சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான மால்ட்டோ கித்தாப்புலே வெளியாகி சிவகார்த்திகேயன் ரசிகர்களை ஆட வைத்து வருகிறது. இந்நிலையில், தற்போது செகண்ட் சிங்கிள் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஹீரோ
எப்போதெல்லாம் சமுதாயத்தில் அநீதி நடக்கிறதோ அப்போதெல்லாம் ஒரு சூப்பர் ஹீரோ வருவான் என்ற கான்செப்டில் ஹீரோ படம் உருவாகியுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முறையாக மாஸ்க் மற்றும் சூப்பர் ஹீரோ உடையணிந்து ஹீரோ அவதாரம் எடுத்துள்ளார்.
யார் ஹீரோ
ஹீரோ படத்தின் செகண்ட் சிங்கிளான ஹீரோ டைட்டில் டிராக் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையில் பா. விஜய்யின் வரிகளில் உருவாகியுள்ள இந்த பாடலில், ஹீரோவுக்கான இலக்கணங்கள் கூறப்பட்டுள்ளன. சக மனிதனை மதிக்கும் எந்த மனிதனும் ஹீரோ என தொடங்கும் இந்த பாடலில் அன்பின் முன்னே தோற்று நிற்பவனும் ஹீரோ என்ற அழகான வரிகளையும் பா.விஜய் எழுதியுள்ளார். யுவன் சங்கர் ராஜா மற்றும் அபி சிமோன் இணைந்து இந்த பாடலை பாடியுள்ளனர்.
டிரெண்டிங்
ஹீரோ படத்தின் செகண்ட் சிங்கிளை சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் வெளியிட்டுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் ஹீரோ செகண்ட் சிங்கிளை டிரெண்ட் செய்து வருகின்றனர். மற்றவன் வெற்றியை பார்த்து நிஜ மகிழ்ச்சி கொள்கிறவன் ஹீரோ என்ற வரிகளையும் பதிவிட்டு வருகின்றனர்.
அருண்ராஜா பாராட்டு
ஹீரோ செகண்ட் சிங்கிள் வெளியாகியுள்ள நிலையில், கனா படத்தின் இயக்குநரும் சிவகார்த்திகேயனின் நண்பருமான அருண்ராஜா காமராஜ், சிவகார்த்திகேயனையும், யுவன் சங்கர் ராஜாவையும் பாராட்டியுள்ளார்.


Click it and Unblock the Notifications











