twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Hero Teaser: படிப்பு இப்ப வியாபாரம்.. கல்விமுறையை மாற்ற காமன்மேன் போதாது.. ஒரு 'ஹீரோ' வேணும்!

    |

    சென்னை: சிவகார்த்திகேயனின் ஹீரோ திரைப்படம் நமது கல்வி முறைக்கு எதிராக பேசுகிறது.

    இரும்புத்திரையில் சைபர் கிரைமின் முகத்திரையை கிழித்த இயக்குனர் பி.எஸ்.மித்ரனின் அடுத்தப் படம் ஹீரோ, இதில் சிவகார்த்திகேயனை சூப்பர் ஹீரோவாக்கியிருக்கிறார்.

    கல்யாணி பிரியதர்ஷன் இந்த படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். இரும்புத்திரை வில்லன் அர்ஜூன் இதில் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ளார். படத்தின் வில்லனாக அபே தியோல் நடித்துள்ளார்.

    கோலிவுட் எஸ்.கே.வின் 'ஹீரோ' டீசர்.. பாலிவுட் எஸ்.கே. வெளியிட்டார்!கோலிவுட் எஸ்.கே.வின் 'ஹீரோ' டீசர்.. பாலிவுட் எஸ்.கே. வெளியிட்டார்!

    ஹீரோ டீசர்

    ஹீரோ டீசர்

    ஹீரோ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதிலும் சமூகத்தில் நிலவி வரும் முக்கிய பிரச்சினையை பற்றி தான் பேசியிருக்கிறார் மித்ரன். அதற்காக சிவகார்த்திகேயனை சூப்பர் ஹீரோவாக்கி அழகு பார்த்திருக்கிறார்.

    கல்வியை பற்றிய படம்

    கல்வியை பற்றிய படம்

    டீசர் ஆரம்பிக்கும் போதே 'ஏ பார் ஆப்பின்ன்னு சொல்றவன் என் புராடக்ட்... ஏ பார் ஏரோபிளேன்னு சொல்றன் என் காம்படீட்டர்' என்ற வசனம் மூலம் இது கல்வியை பற்றிய படம் என புரிய வைக்கிறார் மித்ரன். அடுத்தடுத்த வசனங்கள் நம் கல்விமுறை வியாபாரமாகிவிட்டது என்பதை தோலுரிக்கிறது.

    கல்வி எக்ஸ்போக்கள்

    கல்வி எக்ஸ்போக்கள்

    கல்விக்காக நடத்தப்படும் பெரிய எக்ஸ்போக்கள், கட்டுக்கட்டாக எண்ணப்படும் பணம், கல்வி நிலைய பிரமாண்ட கட்டடங்கள் என காட்சிகளாலும் படத்தின் நோக்கத்தை விவரிக்கிறார் மித்ரன். "மைண்ட் யுவர் பிசினஸ்.. இதத்தான் நம்ம எகிகேஷன் சிஸ்டம் கற்றுத்தரும்" எனும் ஒற்றை வசனமே, இன்றைய கல்விமுறை எதுமாதிரியான மாணவர்களை உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்பதை கூறுகிறது.

    ஜாலியான படம்

    ஜாலியான படம்

    ஆனால் இதையெல்லாம் ஒரு பிரச்சாரமாக இல்லாமல், சூப்பரான கமர்ஷியல் படமாக ஜாலியாக பார்க்கும் வகையில் சொல்கிறார் இயக்குனர். "இந்த சிஸ்டத்தை தட்டிக்கேட்க ஒரு காமன்மேன் பத்தாது.. ஒரு ஹீரோ தேவை" என்ற அர்ஜுனின் வாய்ஸ் ஓவரில் சிவகார்த்திகேயன் எண்ட்ரிக்கொடுப்பதே அதற்கு உதாரணம். பக்கா மாஸ் ஹீரோ படமாக இது இருக்கும் என தெரிகிறது.

    ரகசியம் அறிந்த ஹீரோ

    ரகசியம் அறிந்த ஹீரோ

    கல்வி வியாபாரமாகிவிட்டது என்பதை ஆக்ஷன் திரில்லர் படமாக காட்ட வருகிறார் ஹீரோ. ஜெண்டில்மேன் தொடங்கி, ஏகப்பட்ட படங்கள் இது போல் வந்துவிட்டன தான். ஆனால் ஒரு விஷயம் என்னவென்றால் படத்தை நாம் எப்படி பிரசண்ட் செய்கிறோம், எப்படி மெருகேற்றுகிறோம் பண்ணுகிறோம் என்பதில் தான் இருக்கிறது வெற்றியின் ரகசியம். ஹீரோ அந்த ரகசியத்தை அறிந்துகொண்டிருக்கிறான் என்பதையே டீசர் காட்டுகிறது.

    சூப்பர் ஹீரோ புரோமோஷன்

    சூப்பர் ஹீரோ புரோமோஷன்

    இதுவரை காமன்மேனாக நடித்து வந்த சிவகார்த்திகேயனுக்கு சூப்பர் ஹீரோ புரோமோஷன் கொடுத்திருக்கிறது ஹீரோ. நிஞ்ஜா வாரியர் போல் சில வேலைகளை செய்திருக்கிறார் என்பதை டீசரில் பார்க்க முடிகிறது. மெயின் பிக்சர் வரும் போது தான் அவரது உழைப்பை பற்றி பேச முடியும்.

    அதே டெம்ப்ளேட்

    அதே டெம்ப்ளேட்

    அதேசமயம் சூப்பர் ஹீரோ படங்கள் என்றாலே, அவருக்கு என ஒரு பிரத்யேக உடை, மாஸ்க், பாடி லேங்வேஜ் எல்லாம் இருக்க வேண்டும் என்ற டெம்ப்லேட் காட்சிகளும் ஹீரோவில் இருப்பது தெரிகிறது. ஹாலிவுட் முதல் கோலிவுட் வரை சூப்பர் ஹீரோக்களுக்கு பின்னாடி ஒரு ஜெயண்ட் வீல் ராட்டிணம் சுற்றுவது ஏன் என்பதும், அதன் குறியீடு என்ன என்பதும் இன்றும் புரியாத புதிர் தான். டீசருக்கு இது போதும். மிச்சக்கதையை அடுத்து வரும் டிரெய்லரில் பார்த்துக்கொள்ளலாம்.

    எதுவும் மாறப்போவதில்லை

    எதுவும் மாறப்போவதில்லை

    தனியார் கையில் கல்வி நிலையங்கள் சென்ற பிறகு ஏழை மாணவர்களுக்கு அது எட்டாக்கனியாகிவிட்டது என்பது நாடறிந்த விஷயம் தான். ஆயிரம் ஜென்டில்மேன்கள் வந்தாலும், நூறு ஹீரோக்கள் படையெடுத்தாலும் எதுவும் மாறப்போவதில்லை. இருந்தாலும் ஹீரோ சொல்லவரும் செய்தி இன்றைய காலத்தின் தேவை. வரட்டும்.. இன்னும் தைரியாமாக பேசட்டும்.. சமூகம் மாறட்டும்.

    English summary
    The Hero teaser shows that the movie speaks about the commercialized educational system in the country.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X