லோக்கல் ஷாருக்கான் டீசரை ரிலீஸ் செய்யும் சல்மான் கான்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படத்தின் டீசரை பாலிவுட் நடிகர் சல்மான் கான் நாளை காலை 11:03 மணிக்கு வெளியிடுகிறார்.
சென்னை: பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ஹீரோ படத்தின் டீசர் நாளை வெளியாகிறது.
இரும்புத்திரை படத்தை தொடர்ந்து பி.எஸ். மித்ரன் இயக்கியுள்ள ஹீரோ படம் சூப்பர் ஹீரோ கதையாக உருவாகியுள்ளது.
நாளை காலை 11:03 மணிக்கு பாலிவுட்டின் முன்னணி நாயகன் சல்மான் கான் வெளியிடவுள்ளார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

லோக்கல் ஷாரூக்கான்
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பாலிவுட் பாட்ஷாவாக திகழ்பவர் ஷாரூக்கான். அவரை போலவே நடிகர் சிவகார்த்திகேயனும் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் வெற்றி நாயகனாக வலம் வருகிறார். இதனால், சிவகார்த்திகேயனை ஷாருக்கானை சுருக்கி கூப்பிடுவது போல எஸ்.கே. என்றும், லோக்கல் ஷாரூக்கான் என்றும் செல்லமாக அழைத்து வருகின்றனர்.

பாடம்
சீமராஜா, மிஸ்டர் லோக்கல் படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில், சரியான நேரத்தில் சரியான பாடத்தை தான் கற்றுக் கொண்டதாக நடிகர் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். ரசிகர்களுக்கு பிடித்தமான நல்ல கதைகளை இனிமேல் கவனமாக தேர்வு செய்து நடிப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஹீரோ
இரும்புத்திரை படத்தை இயக்கிய பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். காமெடி, ஆக்ஷன் என நடித்து வந்த சிவகார்த்திகேயன், தற்போது சூப்பர் ஹீரோவாக நடிப்பதால், எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன. அவரது இந்த புதிய முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள்
சல்மான் கான்
கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகி உள்ள ஹீரோ படம் டிசம்பர் 20ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் டீசர் நாளை காலை 11:03 மணிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த டீசரை பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான் கான் வெளியிடவுள்ளார் என்ற அறிவிப்பையும் தயாரிப்புக் குழு வெளியிட்டுள்ளது.

தீபாவளி ட்ரீட்
நம்ம வீட்டு பிள்ளை லாபகரமாக ஓடிவரும் நிலையில், தனது ரசிகர்களுக்கும், பாசமான தம்பி, தங்கைகளுக்கும் அண்ணன் சிவகார்த்திகேயன் தீபாவளி ட்ரீட்டாக ஹீரோ டீசரை கொடுக்கப்போகிறார். இதனால், சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் சூப்பர் ஹீரோவாக சிவகார்த்திகேயன் எப்படி நடித்துள்ளார் என்ற ஆவலோடு காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











