சத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறும் ஹீரோ டிரைலர் லான்ச்!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ திரைப்படத்தின் டிரைலர் லான்ச் தற்போது சத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது.
கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரிப்பில், இரும்புத்திரை இயக்குநர் பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அபய் தியோல், அர்ஜுன், இவானா மற்றும் ரோபோ சங்கர் நடித்துள்ள ஹீரோ திரைப்படம் வரும் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது.
சூப்பர் ஹீரோ படமாக உருவாகியுள்ள இந்த படத்திற்கு கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் வேற லெவலில் விளம்பரங்களை செய்து வருகின்றது.
ஹீரோ டிரைலர் லான்ச்
சத்யம் திரையரங்கில் இன்று காலை ஹீரோ டிரைலர் லான்ச் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. ஹீரோ சிவகார்த்திகேயன், இயக்குநர் பி.எஸ். மித்ரன், ரோபோ சங்கர், பா. விஜய் மற்றும் பலர் இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.
ஆன்லைனில்
சத்யம் திரையரங்கில் பிரம்மாண்டமாக ஹீரோ டிரைலர் வெளியீடு நடைபெற்று வருகிறது. ஆன்லைனில் இந்த டிரைலர் காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் என்ட்ரி
ஹீரோ படத்தி ஹீரோ சிவகார்த்திகேயன் செம்ம ஸ்மார்ட்டாகவும் ஹேண்ட்ஸம் லுக்கில் ஹீரோ டிரைலர் லான்ச்சுக்கு வருகை தந்தார். அவரது புகைப்படங்கள் அவரது ரசிகர்களால் இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.
ஹீரோ மாஸ்க்
ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயன் அணிந்திருக்கும் மாஸ்க் மற்றும் சிவகார்த்திகேயன் பயன்படுத்தும் H சிம்பள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் பார்வைக்கு கண்காட்சியாய் வைக்கப்பட்டுள்ளன.
ஹீரோயின்
ஹீரோ படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் ஹீரோயின் வராமல் விழா களைகட்டுமா, ஹீரோ படத்தின் ஹீரோயின் கல்யாணி பிரியதர்ஷன் வெள்ளை சுடிதாரில், க்யூட் ஸ்மைலுடன் வந்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
பிளே ஹீரோ பரிசு
கேஜேஆர் நிறுவனம் சார்பில் ஹீரோ படத்தின் புரொமோஷனுக்காக பிளே ஹீரோ என்ற ஆக்மெண்டட் ரியாலிட்டி கேம் வெளியிடப்பட்டது. அந்த கேமில் அதிக ஸ்கோர் செய்த ரசிகர்களுக்கு சிறப்பு பரிசுகளை சிவகார்த்திகேயன் வழங்கினார்.


Click it and Unblock the Notifications











