சீனாவில் வெளியாகும் இரண்டாவது தமிழ்ப்படம்... சிவா ஹாப்பி அண்ணாச்சி!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பு மற்றும் நடிப்பில் ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த 2018ல் வெளியான படம் கனா. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் வெளியாகி அனைவரையும் கவர்ந்தது இந்தப்படம்.

Recommended Video

சீனாவில் வெளியாகும் இரண்டாவது தமிழ்ப்படம்... சிவா ஹாப்பி அண்ணாச்சி!

சிவகார்த்திகேயனின் கனா படம்

சிவகார்த்திகேயனின் கனா படம்

நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்சின் முதல் தயாரிப்பாள கடந்த 2018ல் வெளியானது கனா. சாதாரண கிராமத்து பின்னணியில் வாழும் இளம் பெண்ணின் கிரிக்கெட் வீராங்கனை கனவு எவ்வாறு நனவாகிறது என்பதை கதைக்களமாக கொண்டிருந்தது இந்தப்படம்.

நனவாகும் கிராமத்து பெண்ணின் கனவு

நனவாகும் கிராமத்து பெண்ணின் கனவு

அந்தப் பெண்ணின் கனவை தன்னுடைய கனவு சிதைந்த நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் எவ்வாறு நனவாக்குகிறார் என்பதையும் இந்தப் படம் பேசியது. கோலிவுட்டில் மட்டுமில்லாமல் எந்த வுட்டிலும் விளையாட்டு குறித்தப் படங்கள் எப்போதுமே சிறப்பான இடத்தை பிடித்துவிடும்.

அருண்ராஜா காமராஜ் இயக்கம்

அருண்ராஜா காமராஜ் இயக்கம்

அந்த வகையில் சிறப்பான கதைக்களத்துடன் உருவான இந்தப் படமும் நல்ல வசூலையும் விமர்சனங்களையும் பெற்றது. அருண்ராஜா காமராஜும் தேர்ந்த இயக்குநரை போல இந்தப் படத்தின் காட்சி அமைப்புகளை எடுத்திருந்தார். சத்யராஜ் -ஐஸ்வர்யா ராஜேஷ் கதாபாத்திரங்கள் மிகச்சிறந்த வரவேற்பை பெற்றிருந்தன.

தேர்ந்தெடுத்த கதாபாத்திரம்

தேர்ந்தெடுத்த கதாபாத்திரம்

அதேபோல சிவகார்த்திகேயனின் கேரக்டரும் தேர்ந்தெடுத்த கதாபாத்திரமாக அமைந்திருந்தது. ஆரம்பத்தில் அவர்மீது ரசிகர்களுக்கு எழும் அனுதாபம் தொடர்ந்து அப்படியே மாறும்வகையில் காட்சிகள் அமைந்தன. இறுதியில் தன்னுடைய லட்சியம் ஐஸ்வர்யா மூலம் நனவாகும் வகையில் படம் அமைந்தது.

சீனாவில் ரிலீசாகும் 2வது தமிழ்ப்படம்

சீனாவில் ரிலீசாகும் 2வது தமிழ்ப்படம்

இந்தப் படம் சிறப்பான விமர்சனங்களை பெற்ற நிலையில், தற்போது சீனாவில் படம் இன்று முதல் திரையிடப்பட்டுள்ளது. சீனாவில் திரையிடப்படும் இரண்டாவது தமிழ்ப்படம் என்ற பெருமையும் கனா படத்திற்கு கிடைத்துள்ளது. முதன்முதலில் ரஜினியின் எந்திரன் 2.O படம் ரிலீசானது குறிப்பிடத்தக்கது.

சிவா மகிழ்ச்சி வீடியோ

சிவா மகிழ்ச்சி வீடியோ

இதனிடையே சீனாவில் படம் ரிலீசாவது குறித்து நடிகரும் தயாரிப்பாளருமான சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், அருண்ராஜா காமராஜ் மற்றும் படக்குழுவினர் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X