Sivakarthikeyan: அஜித் ஸ்டைலில் சிவகார்த்திகேயன்... இதுதான் SK 21 லுக்... வெறித்தனம் வெறித்தனம்!

சென்னை: சின்ன திரையில் இருந்து சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் இன்று டாப் ஹீரோக்கள் லிஸ்ட்டில் இணைந்துவிட்டார்.

இதனையடுத்து முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து வரும் சிவகார்த்திகேயன், தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் SK 21 படத்தில் நடித்து வருகிறார்.

 Sivakarthikeyans latest clicks with the look of SK21 are trending

இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்னர் பூஜையுடன் தொடங்கியது.

இந்நிலையில், சிவகார்த்திகேயன் லேட்டஸ்ட் போட்டோஸ் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.

அஜித் ஸ்டைலில் சிவகார்த்திகேயன்

கோலிவுட்டின் முன்னணி ஹீரோக்கள் வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் தனி இடம் உள்ளது. விஜய் டிவியில் இருந்து சினிமாவில் அறிமுகமாகி, இன்று டாப் 5 ஹீரோக்களில் ஒருவராகிவிட்டார். குழந்தைகள் முதல் ஃபேமிலி ஆடியன்ஸ் வரை சிவகார்த்திகேயன் படங்களை கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில், தற்போது ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் SK 21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்னர் பூஜையுடன் தொடங்கியது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ஜிவி பிரகாஷ், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோருடன் கமல்ஹாசனும் கலந்துகொண்டார். மேலும் அவரே கிளாப் அடித்து SK 21 படப்பிடிப்பையும் தொடங்கி வைத்தார். அதன்பின்னர் முதற்கட்ட படப்பிடிப்புக்காக காஷ்மீர் பறந்தது SK 21 படக்குழு.

ஆனால், அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை என தெரிகிறது. இதனையடுத்து காஷ்மீர் சென்றிருந்த SK 21 படக்குழு சென்னை திரும்பியது. இந்நிலையில் தற்போது மீண்டும் அனுமதி வாங்கி அதன் பின்னர் காஷ்மீருக்கு செல்ல படக்குழு திட்டமிட்டுள்ளதாம். இதனிடையே சிவகார்த்திகேயனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ் வைரலாகி வருகிறது.

அஜித் குமார் தான் செல்லும் இடங்களில் ரசிகர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களுடன் செல்ஃபி எடுத்து வருகிறார். அதேபோல், சிவகார்த்திகேயனும் ரசிகையுடன் செல்ஃபி எடுத்துள்ளார். முக்கியமாக இதில் அடர்ந்த தாடியுடன் காணப்படும் சிவகார்த்திகேயன், அஜித் ஸ்டைலில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் மாஸ் காட்டுகிறார். இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

SK 21 படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ள நிலையில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன், அயலான் படங்களும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. ஜூலை இறுதியில் மாவீரனும், தீபாவளிக்கு அயலான் திரைப்படமும் ரிலீஸாகின்றன. இந்த இரண்டு படங்களும் சிவகார்த்திகேயன் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X