சிவகார்த்திக்கேயனின் மான் கராத்தே ஏப்ரலில் ரிலீஸ்
சிவகார்த்திக்கேயன், நடித்து வரும் மான் கராத்தே திரைப்படம் வரும் தமிழ் புத்தாண்டினை முன்னிட்டு ஏப்ரல் 11ல் ரிலீஸ் ஆகும் என கூறப்பட்டுள்ளது.
ஏ.ஆர் முருகதாசின் அசிஸ்டென்ட் இயக்கியுள்ள படம் மான் கராத்தே. இந்த படத்தில் முன் முறையாக ஹன்சிகா ஜோடி சேருகிறார்.
பில்லா 2, துப்பாக்கி படங்களில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் மான் கராத்தே படத்தில் வில்லனாகிறார்.

வெளிநாடுகளில் டூயட்
சிவகார்த்திக்கேயன் - ஹன்சிகா ஜோடி சென்னை, பெங்களூர் மட்டுமல்லாது வெளிநாடுகளுக்கு சென்று டூயட் பாடிவிட்டு வந்துள்ளனர். மால்டா, ஐரோப்பிய நாடுகளிலும் பாடல்காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளதாம்.

புத்தாண்டு தினத்தில்
ஜனவரி 1ம் தேதி புத்தாண்டில் மான்கராத்தே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீசாகிறது.

காதலர் தினத்தில்
மான்கராத்தே படத்தின் பாடல் பிப்ரவரி 14ம் தேதியான காதலர் தினத்தில் ரிலீசாகிறது.

தமிழ்புத்தாண்டு
தமிழ் புத்தாண்டு தினத்தின் விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 11ம் தேதி மான்கராத்தே படத்தினை ரிலீஸ் செய்ய உள்ளனர்.


Click it and Unblock the Notifications











