ஜெயிலர் ரிலீஸ் தேதியால் மாவீரன் படக்குழுவுக்கு மீண்டும் நெருக்கடி... டென்ஷனான சிவகார்த்திகேயன்!
சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் எஸ்கே 21 படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார்.
முன்னதாக மடோன் அஸ்வின் இயக்கிய மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்திருந்தார்.
இந்தப் படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், ஜெயிலர் படத்திற்காக மாவீரன் ரிலீஸ் தேதியை மாற்றினார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில், ஜெயிலர் ரிலீஸ் தேதியால் மாவீரன் படக்குழுவுக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாம்.
மாவீரன் படக்குழுவுக்கு மீண்டும் நெருக்கடி
சிவகார்த்திகேயன் நடித்துள்ள மாவீரன் திரைப்படம் ஜூலை 14ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக இந்தப் படம் ஆகஸ்ட் 11ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், திடீரென சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாகும் என சன் பிக்சர்ஸ் தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே ஆகஸ்ட்டில் வெளியாவது குறிப்பிடத்தக்கது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் வெற்றியால் தான், விஜய்யின் பீஸ்ட், ரஜினியின் ஜெயிலர் படங்களை இயக்கும் வாய்ப்பு நெல்சனுக்கு கிடைத்தது. முக்கியமாக சிவாவும் நெல்சனும் நெருங்கிய நண்பர்களாகவும் வலம் வருகின்றனர்.
இதனால், நண்பன் நெல்சனுக்காக மாவீரன் ரிலீஸ் தேதியை மாற்ற முடிவு செய்தார் சிவகார்த்திகேயன். அதன்படி தான் ஒரு மாதம் முன்பே ஜூலை 14ல் மாவீரன் திரைப்படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. முதலில் ஆகஸ்ட் மாதம் தான் வெளியாகும் என மாவீரன் படக்குழுவினர் வேலை பார்த்து வந்தனர். ஆனால், தற்போது ஒரு மாதம் முன்னதாகவே ரிலீஸாகவுள்ளதால், இறுதிக்கட்ட பணிகளில் மவீரன் படக்குழு வேகம் காட்டியுள்ளதாம்.
மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் தனது போர்ஷனை முடித்துவிட்டு எஸ்கே 21 படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார். ஆனால், இறுதிக்கட்ட ஷூட்டிங், பேச் ஓர்க், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் எல்லாம் அதிகம் இருப்பதால், மாவீரன் டீம் மொத்தமும் தலையை பிய்த்துக்கொண்டு வேலை பார்த்து வருகிறார்களாம். இருப்பினும் கடைசியாக வெளியான தகவலின் படி, நேற்றோடு மாவீரன் ஷூட்டிங் முடிந்ததாக சொல்லப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து டப்பிங், பின்னணி இசை, எடிட்டிங் உட்பட போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தொடங்கவுள்ளதாம். மடோன் அஸ்வின் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகும் மாவீரன் படத்தில், சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர், வில்லனாக மிஷ்கின் ஆகியோர் நடித்து வருகின்றனர். நண்பன் நெல்சனுக்காக மிக பெருந்தன்மையாக மாவீரன் ரிலீஸ் தேதியை மாற்றினார் சிவகார்த்திகேயன். அதனால், மாவீரன் படக்குழு தான் ரொம்பவே பரபரப்பாக வேலை பார்த்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











