Scene Ah வெளியானது மாவீரன் ஃபர்ஸ்ட் சிங்கிள் க்ளிம்ப்ஸ்... இது சும்மா ட்ரெய்லர்தான் மா!

சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

மடோன் அஸ்வின் இயக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.

சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் மடோன் அஸ்வினுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் மாவீரன் ஷூட்டிங் கைவிடப்பட்டதாக சொல்லப்பட்டது.

ஆனால், வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை செம்ம மாஸாக வெளியிட்டுள்ளது படக்குழு.

 வதந்திகள் நிரம்பிய மாவீரன்

வதந்திகள் நிரம்பிய மாவீரன்

கோலிவுட்டின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். யோகிபாபு ஹீரோவாக நடித்த மண்டேலா திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த மடோன் அஸ்வின், மாவீரன் படத்தை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது. மண்டேலா படத்திற்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்ததால் மாவீரன் மீதும் ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் ஷூட்டிங்கில் சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் மடோன் அஸ்வினுக்கும் மோதல் என தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன.

 வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி

மாவீரன் திரைப்படம் தொடங்கப்பட்ட சில நாட்களிலேயே அதன் ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாக சொல்லப்பட்டது. கதையில் திருப்தி இல்லாததால் சிவகார்த்திகேயனுக்கும் இயக்குநர் மடோன் அஸ்வினுக்கும் பிரச்சினை ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த தகவல்களை அடியோடு மறுத்த மாவீரன் டீம், பொங்கல் பண்டிகை கொண்டாடிய வீடியோவையும் படக்குழு வெளியிட்டிருந்தது. ஆனாலும் தொடர்ந்து மாவீரன் குறித்த வதந்திகள் வெளிவந்தவாறே இருந்த நிலையில், தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் கொடுத்து நெட்டிசன்களின் வாயை அடைத்துள்ளது மாவீரன் படக்குழு.

 இது சும்மா ட்ரெய்லர் தான்

இது சும்மா ட்ரெய்லர் தான்

சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கும் இந்தப் படத்தில் சரிதா உள்ளிட்ட பலரும் கமிட்டாகியுள்ளனர். அதேபோல் வில்லனாக இயக்குநர் மிஷ்கின் நடித்துள்ளார், பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். இந்நிலையில், மாவீரன் ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த அப்டேட் செம்ம மாஸாக வெளியாகியுள்ளது. "சீன் ஆஹ்... சீன் ஆஹ்" என்ற கேப்ஷனுடன் இது சும்மா ட்ரெய்லர் தான் மா என ஃபர்ஸ்ட் சிங்கிளின் க்ளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது.

 எஸ்கே ரசிகர்கள் உற்சாகம்

எஸ்கே ரசிகர்கள் உற்சாகம்

பரத் ஷங்கரின் இசையில் மாவீரன் ஃபர்ஸ்ட் சிங்கிள் க்ளிம்ப்ஸ் இணையத்தை தெறிக்கவிட்டுள்ளது. ரெட்ரோ ஸ்டைல் இசையில் ஆரம்பிக்கும் இந்த கிளிம்ப்ஸ் வீடியோ போகப் போக தர லோக்கலாக மாஸ் காட்டுகிறது. சிவகார்த்திகேயனுடன் நூற்றுக்கும் மேற்பட்ட டான்ஸர்கள் ஆட்டம் போட, அந்த இடம் முழுவதும் புழுதி பறக்க வைப் கூடுகிறது. இந்தப் படம் வரும் 17ம் தேதி வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. திடீரென வெளியான மாவீரன் ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து மாவீரன் பட அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X