என்ன இப்படி ஆகிப்போச்சு..சிவகார்த்திகேயனின் “மாவீரன்“ படப்பிடிப்பு நிறுத்தமா?
சென்னை : சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மாவீரன்' படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் இணை தயாரிப்பாளரான அருண் விஸ்வா தான் இந்த படத்தையும் தயாரிக்கிறார். மாவீரன் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றது.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என தலைப்புவைக்கப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயன்
அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டான்' திரைப்படம் வசூல் ரீதியாக சாதனை படைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து, தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கும் 'ப்ரின்ஸ்' படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இப்படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மாவீரன்
இதனை அடுத்து கமல்ஹாசன் தயாரிப்பில் SK21 படத்தில் நடிக்கவுள்ளார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ள இப்படத்தில் சாய் பல்லவி நடிக்கிறார். இதனிடையே, மண்டேலா படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'மாவீரன்'. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்க அனுபவ நடிகை சரிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

25 லட்சம் சம்பளம்
அதிதி ஷங்கர் நடித்த விருமன் படம் வெளியாவதற்கு முன்பாகவே சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். முதல் படம் கூட வெளியாகாத நிலையில் இவர் சிவகார்த்திகேயன் உடன் ஜோடி சேர்ந்து நடிக்க ரூபாய் 25 லட்சம் சம்பளம் வாங்க வாங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.

வில்லனாக மிஸ்கின்
இப்படத்திற்கு ஆடை, மண்டேலா ஆகிய படங்களுக்கு இசையமைத்த பரத் ஷங்கர் இசையமைக்கிறார். யோகிபாபு நடிப்பது உறுதியாகி உள்ள நிலையில், இயக்குனர் மிஷ்கின் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். கவுண்டமணியும் இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பிரின்ஸ் படத்தைத் தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தான் இந்தப் படத்தையும் தயாரிக்கின்றனர்.

படப்பிடிப்பு நிறுத்தம்
இந்நிலையில், படத்தின் படப்பிடிப்பு கடந்த பூஜையுடன் தொடங்கிய நிலையில், ஷூட்டிங் தொடங்கிய 3 நாட்களில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றிய அதிகாரப்பூர்வ காரணம் எதுவும் வெளியாகவில்லை எனினும் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டு இருக்கலாம் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











