For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  சிவகார்த்திகேயனின் மாவீரன் படப்பிடிப்பு நிறுத்தம்.. இதுதான் காரணமா? பரபரக்கும் தகவல்!

  |

  சென்னை: இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர் நடிப்பில் உருவாகி வரும் புதிய படமான மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  சிவகார்த்திகேயன், மரியா, சத்யராஜ் நடிப்பில் வெளியான பிரின்ஸ் திரைப்படம் இந்த தீபாவளிக்கு வெளியானது. ஆனால், இயக்குநர் அனுதீப்பின் சொதப்பல் திரைக்கதை காரணமாக படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது.

  இந்நிலையில், மாவீரன் படத்தை நிச்சயம் வெற்றிப் படமாக மாற்ற வேண்டும் என்கிற முனைப்பில் சிவகார்த்திகேயன் ஈடுபட்டு வருகிறார்.

  வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் 'ரஞ்சிதமே’ பாடல் வெளியானது.. விஜய், ராஷ்மிகா வெறித்தனமான டான்ஸ்! வாரிசு ஃபர்ஸ்ட் சிங்கிள் 'ரஞ்சிதமே’ பாடல் வெளியானது.. விஜய், ராஷ்மிகா வெறித்தனமான டான்ஸ்!

  தூக்கிவிட்ட நெல்சன்

  தூக்கிவிட்ட நெல்சன்

  இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் காமெடி ரகளையாக வெளியான டாக்டர் திரைப்படம் தோல்விகளில் இருந்து சிவகார்த்திகேயனை மீட்டது. மிஸ்டர் லோக்கல், சீமராஜா படங்களால் துவண்டுப் போய் கிடந்த சிவகார்த்திகேயனை 100 கோடி நாயகனாக தூக்கிவிட்டதே இயக்குநர் நெல்சன் தான். சிவகார்த்திகேயன் படத்தை இயக்கி முடித்த கையோடு பீஸ்ட், ஜெய்லர் என டாப் ஹீரோக்கள் படத்தை இயக்கும் ஜாக்பாட் நெல்சனுக்கு அடித்தது.

  டான் பிளாக்பஸ்டர்

  டான் பிளாக்பஸ்டர்

  டாக்டர் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் வெளியான டான் படமும் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் வசூல் கடந்து பிளாக்பஸடர் ஹிட்டடித்தது. தனுஷ், கார்த்தி, விஜய்சேதுபதி படங்களுக்கு முன்பாகவே இவ்வளவு பெரிய கல்கெஷனை அள்ளிய சிவகார்த்திகேயனின் அடுத்த படம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு கிளம்பியது.

  தீபாவளி ரிலீஸ்

  தீபாவளி ரிலீஸ்

  முன்னதாகவே வெளியாக வேண்டிய பிரின்ஸ் திரைப்படத்தில் கடைசி நேரத்தில் ஏதாவது கரெக்‌ஷன் செய்து வெளியிடலாம் என்கிற நினைப்பிலேயே படத்தை தீபாவளி ரிலீஸாக மாற்றினர். ஆனாலும், தீபாவளிக்கு போய் இந்த படத்தையா பார்த்தோம் என தல தீபாவளி கொண்டாடிய பல தம்பதியினர் வருத்தப்படும் அளவுக்கு படம் படுமொக்கையாக மாறிவிட்டது.

  மாவீரன் நிறுத்தம்

  மாவீரன் நிறுத்தம்

  மண்டேலா படத்திற்காக தேசிய விருது வாங்கிய இயக்குநர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் அடுத்ததாக சிவகார்த்திகேயன், ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடித்து வரும் மாவீரன் படத்தின் மீது தான் சிவகார்த்திகேயன் ரசிகர்களின் அத்தனை எதிர்பார்ப்புகளும் ஒன்றாக திரண்டு நிற்கும் வேளையில், திடீரென அந்த படத்தின் படப்பிடிப்பு அதிரடியாக நிறுத்தப்பட்டதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.

  இயக்குநருடன் மோதல்

  இயக்குநருடன் மோதல்

  சிவகார்த்திகேயனுக்கும் மாவீரன் படத்தின் இயக்குநர் மடோன் அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் விளைவு தான் மாவீரன் படப்பிடிப்பே அதிரடியாக நிறுத்தப்பட்டதாக தகவல்கள் தீயாக பரவி வருகின்றன. ஆனால், அதெல்லாம் இல்லைங்க என இன்னொரு தகவலும் வெளியாகி உள்ளது.

  மழை தான் காரணமா

  மழை தான் காரணமா

  மாவீரன் படத்தின் காட்சிகள் அவுட்டோரில் படமாக்கப்பட்டு வரும் நிலையில், இந்த வாரம் முழுக்கவே மழை பின்னி பெடலெடுத்த நிலையில், தான் படப்பிடிப்பு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும் வரும் திங்கள் முதல் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கும் என நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதுவரை 40 சதவீதம் படமும் நிறைவடைந்து விட்டதாக கூறுகின்றனர்.

  எது உண்மை

  எது உண்மை

  மழைக்காகத்தான் நிறுத்தப்பட்டதா? கால்ஷீட்டை வீணடிக்காமல் செட்டுக்குள் நடக்கும் காட்சிகளை படமாக்கி இருக்கலாமே என்றும் கேள்விகள் கிளம்பி உள்ளன. இதில், எது உண்மை என்பது தெரியவில்லை. கூடிய விரைவில் படப்பிடிப்பு சுமூகமாக ஆரம்பிக்கப்பட்டு மாவீரன் அடுத்த ஆண்டு சம்மருக்கு வெளியாக வேண்டும் என்பதே சிவகார்த்திகேயன் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

  English summary
  Sivakarthikeyan and Director Madonne Ashwin clash leads to Maaveeran shooting stopped buzz trending in social media. But, closed circles reveals, its just a rumour movie's next schedule will starts from coming Monday.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X