நம்ம வீட்டு பிள்ளை வெற்றி கொண்டாட்டம்… சக்ஸஸ் மீட் நடத்திய சன் பிக்ஸர்ஸ்

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், அனு இம்மானுவேல், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான நம்ம வீட்டு பிள்ளை படம் வெற்றி பெற்றதை அடுத்து, இப்படத்தை தயாரித்த சன் பிக்ஸர்ஸ் நிறுவனம் சக்ஸஸ் மீட் நிகழ்ச்சியை நடத்தியது. இதில் சிவகார்த்திகேயன், பாண்டிராஜ், சூரி, டி.இமான், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவான படம் நம்ம வீட்டு பிள்ளை. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இப்படம் வெளியானது. சிவகார்த்திகேயனின் முந்தைய படங்களான சீமராஜா மற்றும் மிஸ்டர்.லோக்கல் என இரண்டு படங்களும் தோல்வியை தழுவியது.

Sivakarthikeyans Namma Veettu Pillai success Meet

ஆகவே தான், நம்ம வீட்டு பிள்ளை படம் கண்டிப்பாக வெற்றி பெற வேண்டும் என சிவகார்த்திகேயன் உள்பட அவரது அபிமானிகளும் ரசிகர்களும் எதிர்பார்த்தனர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே, படமும் மக்களிடையை நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக பி மற்றும் சி சென்டர்களில் படத்தை குடும்பம் குடும்பமாக வந்து பார்த்து ரசித்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் எப்பொழுதுமே இந்த மாதிரியான குடும்ப சென்ட்டிமென்ட் படங்களுக்கு பலத்த வரவேற்பு உள்ளது. அதை சரியாக நாடிபிடித்து புரிந்து கொள்ளும் ஒரு சில இயக்குநர்கள், அதை சிறப்பாக செய்து விடுங்கின்றனர். அதில் தேர்ச்சி பெற்ற ஒருவர் தான் இயக்குநர் பாண்டிராஜ்.

இவரின் பசங்க, மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா மற்றும் கடைகுட்டி சிங்கம் ஆகிய படங்கள் பி அண்ட் சி சென்டர்களில் குடும்ப ரசிகர்களை கவர்ந்த படங்கள். .சிவகார்த்திகேயனும் அப்படி குடும்ப உறுப்பினர்களோடு சென்று பார்க்கும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர்களின் இந்த கூட்டணியே படத்தை வெற்றி பெற செய்திருக்கிறது.

தமிழ் சினிமா மட்டுமின்றி, உலக சினிமாவிலும் இப்படி ஒரு பார்முலா இருக்கிறது. அது என்னவேன்றால் ஒரு படம் இளைஞர்களை கவர்வதை விட குடும்பங்களை கவர்ந்தால், அந்த படம் வெற்றி பெற்று மாபெரும் வசூல் சாதனை செய்யும். ஏனெனில் ஒரு குடும்பம் படம் பார்க்க செல்லும் போது குறைந்துது 4 நபர்களில் இருந்து 10 நபர்கள் வரை செல்வதனால் அப்படம் வசூலில் மாபெரும் வெற்றி அடைகிறது.

நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அனு இமானுவேல் மற்றும் தங்கையாக ஜஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளனர். மேலும், பாரதிராஜா, சூரி, நட்டி, சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்திங்களில் நடித்து இருந்தனர்

இந்த படத்தின் சக்ஸஸ் மீட் சன் பிக்சர்ஸால் நடத்தப்பட்டது. இதில் சிவகார்த்திகேயன், பாண்டிராஜ், சூரி, டி.இமான், ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

சக்ஸஸ் மீட் புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு படத்தை வெற்றி பெற செய்ததுக்கு நன்றி தெரிவித்து இருந்தார் டி.இம்மான்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X