Namma Veettu Pillai Trailer: ஒரு தடவை ஜெயிச்சா பத்தாது.. ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கணும்.. சிவா மாஸ்!
நம்ம வீட்டுப் பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
சென்னை: சிவகார்த்திக்கேயனின் நம்ம வீட்டுப் பிள்ளை பட டிரெய்லர் வெளியாகியுள்ளது.
மிஸ்டர் லோக்கலைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள படம் நம்ம வீட்டுப்பிள்ளை. பாண்டி ராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் சிவாவுக்கு தங்கையாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ளார். இப்படத்தில் காமெடியில் மீண்டும் சிவாவுடன் சூரி இணைந்துள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் இடம் பெற்றுள்ள, 'உன்கூடவே பொறக்கணும்' பாடல் லிரிக் வீடியோ ஒரு மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்தது.

இந்நிலையில் இன்று அப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. அண்ணன், தங்கை பாசம், காதல், காமெடி என அனைத்தும் கலந்த கலவையாக இந்த டிரெய்லர் உள்ளது. 'ஒரு தடவை ஜெயிச்சா பத்தாது.. ஒவ்வொரு தடவையும் ஜெயிக்கணும்', 'கஷ்டத்துல கலந்துக்கற ஒவ்வொருத்தனும் பங்காளி தான்' என டயலாக்குகள் நச்சென உள்ளது.

ஆக்சன் காட்சிகளிலும் சிவகார்த்திக்கேயன் மாஸ் காட்டியுள்ளார். டிரெய்லரில் காமெடி ஒன்றும் சொல்லும்படிஇல்லை. சிவகார்த்திக்கேயன், ஐஸ்வர்யா ராஜேஷ் காட்சிகள் திருப்பாச்சி படத்தை ஞாபகப் படுத்துவதாக உள்ளது. பாரதிராஜா வித்தியாசமான வயதான தோற்றத்தில் நடித்துள்ளார்.

கடைக்குட்டி சிங்கம் போலவே இப்படமும் நல்ல குடும்பப்படமாக செண்டிமெண்ட் காட்சிகளுடன் இருக்கும் எனத் தெரிகிறது. ஆனால், சிவா-சூரி காமெடி பழையபடி இல்லாதது அவரது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. நம்ம வீட்டு பிள்ளை வரும் 27ம் தேதி ரிலீசாகிறது.


Click it and Unblock the Notifications











