தீபாவளிக்கு பிரின்ஸ் ரிலீசோட இன்னொரு சர்ப்பிரைசா.. ரசிகர்களிடம் சஸ்பென்ஸ் வைத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் நாளைய தினம் ரிலீசாகவுள்ள நிலையில் அடுத்தடுத்து பல பிரமோஷன்களில் அவர் ஈடுபட்டு வருகிறார்.

நேற்றைய தினம் படத்தின் பிரமோஷனின் ஒரு பகுதியாக ட்விட்டர் லைவில் ரசிகர்களுடன் உரையாடினார்.

தமிழ், தெலுங்கில் படம் ரிலீசாகவுள்ள நிலையில் சென்னை, ஐதராபாத்தில் படத்தின் பிரமோஷன்கள் முழுவீச்சில் நடைபெற்றன.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் நாளைய தினம் ரிலீசாகவுள்ளது. படம் தமிழ், தெலுங்கில் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தின் பிரமோஷன்கள் சென்னை, ஐதராபாத்தில் முழுவீச்சில் நடைபெற்றன. படத்தில் பிரிட்டனை சேர்ந்த நாயகியை காதலிக்க நாயகன் மேற்கொள்ளும் முயற்சிகளே கதைக்களம் என முன்னதாக பிரமோஷனின்போது சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.

ட்விட்டர் லைவில் சிவகார்த்திகேயன்

ட்விட்டர் லைவில் சிவகார்த்திகேயன்

நேற்றைய தினம் ட்விட்டர் லைவில் வந்த சிவகார்த்திகேயனிடம் இயக்குநர் வெங்கட் பிரபு உள்ளிட்ட பலரும் பல கேள்விகளை கேட்டிருந்தனர்.சிவகார்த்திகேயன் ரெட்டை வேடத்தில் நடிப்பது எப்போது, சாணிக்காயிதம் போன்ற படங்களில் நடிப்பது எப்போது, எப்போதாவது இந்த பீல்டிற்கு ஏன் வந்தோம் என்று தோன்றியதுண்டா என்பது போன்ற கேள்விகளை ரசிகர்கள் அடுக்கினர்.

சிவகார்த்திகேயன் சுவாரஸ்யம்

சிவகார்த்திகேயன் சுவாரஸ்யம்

அவை அனைத்திற்கும் மிகவும் பொறுமையாகவும் ரசிகர்களை கவரும் வகையிலும் சிவகார்த்திகேயன் பதில்கள் காணப்பட்டன. பிரின்ஸ் படத்தின் கதையில் வித்தியாசமான வகையில் காமெடியை இயக்குநர் அனுதீப் புகுத்தியுள்ளதாகவும் அதற்கு ரசிகர்களின் ரெஸ்பான்சை தெரிந்துக் கொள்ள தான் ஆவலாக இருப்பதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சிவகார்த்திகேயன் புதிய ப்ரமோ

சிவகார்த்திகேயன் புதிய ப்ரமோ

இதனிடையே இன்றைய தினம் அவர் வெளியிட்டுள்ள மற்றொரு ப்ரமோவில் வெளிநாட்டிலிருந்து ஒருவர் கால் செய்து பிரின்ஸ் வெளியீட்டை போல மற்றொரு டாப் சீக்ரட் இருக்கிறதாமே என்று கேட்கிறார். யாரிடமும் சொல்லாதீர்கள் என்றும் கூறிவிட்டு போனை கட் செய்கிறார்.

 ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்

இந்த போனால் கடுப்பான சிவகார்த்திகேயன், ஆனால் தனக்கு இதுகுறித்து தெரியும் என்றும் பிரின்ஸ் படத்தின் ரிலீசுடன் மற்றொரு சர்ப்ரைசும் காத்திருப்பதாகவும் கூறுகிறார். ரசிகர்களை காத்திருக்கவும் கேட்டுக் கொள்வதாக அந்த ப்ரமோ நிறைவடைகிறது. பிரின்ஸ் படத்துடன் மற்றொரு சர்ப்ரைஸ் என்றால் அது அயலான் ரிலீஸ் அப்டேட்டாக இருக்குமோ என்று ரசிகர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X