twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அது பழையோ போட்டோ.. வேலை ஆரம்பிக்கலை.. விளக்கிய சிவகார்த்திகேயன் பட இயக்குநர்!

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : தமிழ் சினிமா துறையினர் சார்பாக ஸ்ட்ரைக் நடைபெற்று வரும் நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் உள்ளிட்ட சில படங்களின் ஷூட்டிங் நடைபெறுவது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.

    'இன்று நேற்று நாளை' படத்தை இயக்கிய ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் அடுத்து நாயகனாக நடிக்க உள்ள படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படம் சம்பந்தமாக சிவகார்த்திகேயன், ரவிகுமார் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இருக்கும் போட்டோ சமூக வலைதளங்களில் வெளியானது.

    Sivakarthikeyans next film director about cinema strike,

    ரஹ்மானுடன் நடந்த மறக்கமுடியாத சந்திப்பு எனக் குறிப்பிட்டு சிவகார்த்திகேயனும் ஒரு புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். சினிமா ஸ்ட்ரைக்கின்போது, இசைக்கோர்ப்பு, உள்ளிட்ட வேலைகளும் நடைபெறக்கூடாது என உத்தரவிட்டது தயாரிப்பாளர் சங்கம்.

    இந்நிலையில், இந்தப் புகைப்படம் குழப்பத்தை உருவாக்கவே, அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் ரவிகுமார் ராஜேந்திரன். "தற்போது ஸ்ட்ரைக் நடப்பதால் படம் தொடர்பான எந்த வேலையையும் முன் எடுத்து வைக்கவில்லை. சிவகார்த்திகேயன், பொன்ராம் படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தின் வேலை முழுமையாக முடிந்த பிறகு தான் என் பட வேலையை ஆரம்பிக்க முடியும்" எனக் கூறியிருக்கிறார்.

    தமிழ்த் திரையுலகத்தில் மிகப் பெரிய திட்டத்துடன் அடி மேல் அடி எடுத்து வைத்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். தன் திரைப் பயணத்தை சாதாரணமாக ஆரம்பித்தவர் படிப்படியாக உயர்ந்து முன்னணி ஹீரோயின்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆரம்பித்தார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் படத்திலும் நடிக்கவிருக்கிறார். தயாரிப்பாளராகவும் வளர்ந்திருக்கிறார்.

    English summary
    AR Rahman will be composed music for Sivakarthikeyan's next film. Some photos was released on social networks by Sivakarthikeyan, Ravikumar and AR Rahman. Director Ravikumar has explained about this photo, as Strike takes place.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X