சிவகார்த்திகேயனின் பராசக்தி.. துணை நிற்கும் ரஜினிகாந்த், கமல்ஹாசன்?.. யப்பா வேற லெவல் ஹைப் ஏறுதே!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்த ஐந்தாம் தேதி ரிலீசான மதராஸி திரைப்படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாக அப்படம் ஓரளவு ரெஸ்பான்ஸ் பெற்றாலும் வசூல் ரீதியாக டீசண்டான வரவேற்பையே பெற்றிருப்பதாக திரைத்துறையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்ததாக பராசக்தி திரைப்படம் அடுத்த மாதம் பத்தாம் தேதி வெளியாகவிருக்கிறது.

சிவகார்த்திகேயனின் கரியரை அமரன் திரைப்படம் உச்சத்தில் கொண்டு சென்றது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுடன் சாய் பல்லவி உள்ளிட்டோர் நடித்திருந்த அத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அந்த படம் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் பெற்றது. உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய்க்கு மேல் அமரன் வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

சிவகார்த்திகேயனின் மதராஸி: அமரன் படம் கொடுத்த வெற்றி சிவகார்த்திகேயனுக்கு மேற்கொண்டு பொறுப்பை வழங்கியிருக்கிறது. அந்த வெற்றியை இனிவரும் படங்களில் தக்க வைக்க வேண்டும் என்ற முழுமனைப்போடு ஒவ்வொரு படத்திலும் அவர் உழைக்க ஆரம்பித்திருக்கிறார். அந்த வகையில் ஏ.ஆர்.முருகதாஸின் இயக்கத்தில் மதராஸி படத்தில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். இதில் அவருக்கு ஜோடியாக ருக்மிணி நடித்திருந்தார். மேலும் வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.

Sivakarthikeyan s Parasakthi Audio Launch to Feature Rajinikanth and Kamal Haasan
Photo Credit:

முருகதாஸுக்கு முக்கியமான படம்: சிவகார்த்திகேயன் மட்டுமின்றி ஏ.ஆர். முருகதாஸுக்கும் இந்த படம் முக்கியமான ஒன்றாகவே கருதப்பட்டது. ஏனெனில் கடந்த சில வருடங்களாக அவர் இயக்கிய படங்கள் தோல்வியையே சந்தித்தன. தோல்வி மட்டுமின்றி கடுமையான ட்ரோல்களையும் சந்தித்து; இனி முருகதாஸ் அவ்வளவுதான் என்ற நிலைமையை உருவாக்கியது. எனவே இந்த படத்தை ஹிட்டாக கொடுத்து கம்பேக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் முருகதாஸ். ஆனால் பெரிய வரவேற்பை பெறவில்லை.

பராசக்தி: இதற்கிடையே சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25ஆவது படமாக பராசக்தி படத்தில் நடித்திருக்கிறார். இதில் ரவி மோகன் வில்லனாக நடிக்க; அதர்வா முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். ஸ்ரீலீலா ஹீரோயினாக நடித்திருக்கிறார்.முதலில் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸ் என்று சொல்லப்பட்டது. ஆனால் அன்றைய தினம் ஜனநாயகன் வருவதால் 14ஆம் தேதிக்கு பராசக்தி தள்ளிப்போனது. இப்போதோ ஜனநாயகனுக்கு போட்டியாக பத்தாம் தேதி பராசக்தியை இறக்குகிறது படக்குழு.

ரஜினி, கமல்: எனவே இந்தப் பொங்கல் விஜய் Vs சிவகார்த்திகேயன் என மாறியிருக்கிறது. இந்நிலையில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ஜனவரி மூன்றாம் தேதி நடக்கவிருக்கிறது என்றும்; இதில் ரஜினிகாந்த், கமல்ஹாசன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ளவிருக்கிறார்கள் எனவும், அவர்களை சந்தித்து அழைக்கவும் செய்துவிட்டார்கள் எனவும் சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X