parasakthi public review: மியூட் போட்டா என்ன? தீ பரவிவிட்டது.. ‘பராசக்தி‘ பொதுமக்கள் விமர்சனம்!
சென்னை: இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாகியுள்ளது "பராசக்தி". டான் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் அதர்வா முரளி, ரவி மோகன், ஸ்ரீலீலா, சேத்தன், பைசல் ஜோசப் என பலர் நடித்துள்ளனர். இன்று தியேட்டரில் வெளியாகி உள்ள பராசக்தி படம் குறித்து பொதுமக்களின் விமர்சனத்தை பார்க்கலாம்.
பராசக்தி படம் வெளிவருமா? வராதா என்று நினைத்திருந்தோம் தற்போது படம் வெளியாகி உள்ளது. எதிர்பார்த்ததைப் போலவே படம் நன்றாக இருக்கிறது. சிவகார்த்திகேயன், அதர்வா, ரவி மோகன், ஸ்ரீலீலா என நான்கு பேரு நல்ல நடிப்பை வெளிப்படுத்தே இருக்கிறார்கள். படம் ஆரம்பத்திலிருந்து முடியும் வரை விறுவிறுப்பாக செல்கிறது. பல காட்சிகளில் கூஸ்பம்ஸாக இருக்கிறது. சுதா கொங்கரா சூரரைப்போற்று படத்திற்கு பிறகு,பெரிய திட்டத்தோடு வந்து இந்த திரைப்படத்தை கொடுத்திருக்கிறார். ஜிவி பிரகாஷின் நூறாவது படம் என்பதால், இசையில் பட்டையை கிளப்பி இருக்கிறார். இப்படி அனைவரும் ஒருங்கிணைந்து இந்த படத்தை கொடுத்து இருக்கிறார்கள்.

பொதுமக்கள் விமர்சனம்: படம் ஹிந்திக்கு எதிரான திரைப்படம் இல்லை, எந்த மொழியாக இருந்தாலும் அதை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்பதை சொல்லும் படமாக தான் இருக்கிறது. படத்தில் ஒரு காட்சியில், சிவகார்த்திகேயன் காதல் என்று வந்துவிட்டால், நான் தெலுங்கு கற்றுக்கொள்வேன் என சொல்லியிருந்தார். அதேபோல, எந்த மொழியாக இருந்தாலும் நாங்கள் சமத்துவமாக கற்றுக்கொள்கிறோம். ஆனால், அதை எங்கள் மீது திணிக்காதீர்கள் என்பது தான் இந்த படத்தில் சொல்லி இருக்கிறார்கள் என்றார்.
இந்திக்கு எதிரான படம் இல்லை: முதல் நாள் முதல் காட்சியைப்படம் பார்த்த மற்றொரு ரசிகை, சிவகார்த்திகேயன் நடிப்பு நன்றாக இருக்கிறது. படம் ஆரம்பிக்கும் போது ஓப்பனிங்கில் ஜெயம் ரவி வந்து தெறிக்கவிட்டார். அதேபோல படத்தில் ஸ்ரீலீலா நன்றாக நடந்து இருக்கிறார். ஆண் இயக்குனர் பெண்ணின் கதாபாத்திரத்தை சொல்வதற்கும், ஒரு பெண் இயக்குனர் பெண்ணின் கதாபாத்திரத்தை சொல்வதற்கும் வித்தியாசங்கள் இருக்கு என்பதை சுதா கொங்கரா நிரூபித்து இருக்கிறார். அது படம் பார்க்கும்போது நன்றாக தெரிகிறது. இந்த படம் ஹிந்தி திணிப்புக்கு எதிரான திரைப்படம் தானே தவிர இந்திக்கு எதிரான படம் இல்லை என்றார்.
படத்தில் பல கட்: படம் பார்த்தா மற்றொரு ரசிகர், படம் நன்றாக இருக்கிறது படம் ஆரம்பிக்கும்போது மெதுவாக சென்றாலும் அதன் பிறகு கதை விறுவிறுப்பு அடைகிறது. ஆனால், காதல் காட்சிகளை வலுக்கட்டாயமாக படத்தில் திண்டிக்கப்பட்டது போல தெரிகிறது. அதை கொஞ்சம் குறைத்து இருக்கலாம். அதேபோல படத்தில் தணிக்கை குழு பல 'கட்' களை கொடுத்து இருக்கிறது. சென்சார் போர்டு கொடுத்த 'கட்' களால் பாதியிடத்தில் என்ன சொல்லவருகிறார்கள் என்று தெரியவில்லை. இத்தனை கட் கள் கொடுத்து இருந்தாலும் படம் நன்றாக இருக்கிறது. ரஜினிக்கு பாட்ஷா படம் போல, சிவகார்த்திகேயனுக்கு பராசக்தி படம் என்றார்.


Click it and Unblock the Notifications











