சிவாஜி பெயரை காப்பாற்றும் பொறுப்பு சிவகார்த்திகேயனுக்கு இருக்கா?.. ப்ளூ சட்டை மாறன் சிதைச்சிட்டாரு

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி படம் ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. சுதா கொங்கரா இயக்கியிருக்கும் இப்படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்பை இப்படம் பெற்றிருக்கிறது. நாளை படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடக்கவிருக்கும் நிலையில்; ஒரு விழாவில் சிவா பேசியதை வைத்து பிரபல திரை விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் கிண்டல் செய்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான மதராஸி திரைப்படம் சுமார் ஹிட்டையும், அமரன் படம் மெகா ஹிட்டையும் பெற்றன. அமரன் படத்தின் பெரிய வெற்றி அவரது மார்க்கெட்டை உச்சத்துக்கு கொண்டு சென்று நிறுத்தியிருக்கிறது. தனது சம்பளத்தையும் அவர் பன்மடங்கு உயர்த்தியிருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக டாப் 10ல் இருந்த அவரை; டாப் 5 இடத்துக்குள் கொண்டு வந்திருக்கிறது எனவும் திரைத்துறையினர் கூறுகிறார்கள்.

எஸ்கேவின் பராசக்தி: இப்போது அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்திருக்கிறார். முதலில் இப்படம் சூர்யா நடிப்பில் புறநானூறு என்கிற பெயரில் உருவாவதாக இருந்தது. அவர் வெளியேறியதால் சிவா உள்ளே வந்தார். இப்படத்தின் கதை மீது ஒட்டுமொத்த படக்குழுவுக்குமே அதீத நம்பிக்கை இருப்பதாக தெரிகிறது. ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மாணவர் போராட்டத்தை அடிப்படையாக வைத்து; சகோதரர்கள் கதையையும் இதில் சுதா பேசியிருப்பதாக தெரிகிறது.

Sivakarthikeyan s Parasakthi Speech Sparks Trolls Blue Sattai Maran Takes a Dig
Photo Credit:

ஜனவரி பத்தாம் தேதி ரிலீஸ்: படம் முதலில் ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகும் என்றுதான் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் வியாபாரம் உள்ளிட்டவைகளை மனதில் வைத்து பத்தாம் தேதியே ரிலீஸ் செய்கிறார்கள். அதற்கு முதல் நாளான ஒன்பதாம் தேதி விஜய்யின் ஜனநாயகன் படம் வெளியாகிறது. இதனால் இந்த பொங்கல் விஜய் Vs சிவகார்த்திகேயன் என்ற போட்டியை சந்திக்கவுள்ளது. எனவே இரண்டு பேரின் ரசிகர்களுக்கும் இப்போதிருந்தே மோதலும் வெடிக்க ஆரம்பித்துவிட்டது.

நாளை இசை வெளியீட்டு விழா: படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் பிரமாண்டமாக நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதில் ரஜினியும், கமலும் கலந்துகொள்வார்கள் என வெளியான தகவல் அனைத்தும் வதந்திதான் என தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தெளிவுப்படுத்திவிட்டார். நாளை விழாவில் எஸ்கேவின் பேச்சு என்ன மாதிரியாக இருக்கப்போகிறது; விஜய் படத்துடன் பராசக்தி வெளியாவதற்கு அவர்தான் காரணம் என்று ஒருதரப்பினர் சொல்லிவரும் நிலையில்; அதுகுறித்து விளக்கம் ஏதும் அளிப்பாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

ப்ளூ சட்டை மாறன் கிண்டல்: இதற்கிடையே சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்று விருது வழங்கும் விழா நடத்தியது. அதில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், பராசக்தி என்பது பவர்ஃபுல்லான டைட்டில். சிவாஜி மாதிரி யாராலும் நடிக்க முடியாது. ஆனால் அவர் பெயரை காப்பாற்றும் பொறுப்பு எனக்கு இருக்கிறது என தெரிவித்திருந்தார். இதனை வைத்து ப்ளூ சட்டை மாறன் கிண்டல் செய்திருக்கிறார். அதாவது, நடிகர் கொட்டாச்சி இளையராஜாவை சந்தித்தபோது; ராஜா கொடுத்த ரியாக்‌ஷன் ஒன்று அப்போது பயங்கரமாக கவனத்தை ஈர்த்தது. அதனை பகிர்ந்திருக்கும் ப்ளூ சட்டை, ராஜாதான் சிவாஜி, கொட்டாச்சிதான் சிவகார்த்திகேயன் என்கிற ரீதியில் கிண்டல் செய்திருக்கிறார். இந்த ட்வீட் வைரலாகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X