சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் தீபாவளி கலெக்ஷன்.. மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்!

சென்னை : சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம் தீபாவளி கலெக்ஷன் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த அக்டோபர் 21ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியானது.

அனுதீப் இயக்கத்தில் உருவான இப்படத்தில் உக்கிரன் நாட்டு நடிகை மரியா மற்றும் சத்யராஜ் நடித்திருந்தனர்.

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்

பிட்ட கோடா, ஜதி ரத்னாலு போன்ற தெலுங்கு திரைப்படங்களை இயக்கிய அனுதீப் சிவகார்த்திகேயனை வைத்து பிரின்ஸ் படத்தை இயக்கி உள்ளார். டாக்டர், டான் வெற்றிப் படமென்பதால் இந்தப் படமும் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது. தீபாவளியை முன்னிட்டு மூன்று நாட்களுக்கு முன்பாகவே இந்தப் படம் திரையரங்கில் வெளியானது.

கலகலப்பான படம்

கலகலப்பான படம்

டான் படத்தில் மாணவராக வரும் சிவகாத்திகேயன் இப்படத்தில் டீச்சராக நடித்துள்ளார். நகைச்சுவையில், தனக்கே உரித்தான பாணியில் அதகளம் செய்துள்ளார் சிவகார்த்திகேயன். கதாநாயகி மரியாவை கண்டதும் காதலிப்பதில் தொடங்கி, அந்தக் காதலை எதிர்க்கும் ஊர்க்காரர்களையும் தந்தையையும் அவர்களை தூண்டிவிடும் சிலரையும் சமாளிப்பது என கதை கலகலப்பாக செல்கிறது.

முதல் நாள் வசூல் விவரம்

முதல் நாள் வசூல் விவரம்

60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் காமெடி மற்றும் காதல் கதையம்சத்தை கொண்ட இந்த படம், பார்வையாளர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் நாளில் தமிழகத்தில் சுமார் 7 கோடி ரூபாயை வசூலித்தது. தெலுங்கிலும் மாஸ் காட்ட வேண்டும் என்று சிவகார்த்திகேயன் எடுத்த முடிவு தற்போது அவரின் காலை வாரிவிட்டுள்ளது.

தீபாவளி வசூல்

தீபாவளி வசூல்

இந்நிலையில் தீபாவளியன்று நேற்று மட்டும் பிரின்ஸ் படம் தமிழகத்தில் ரூ 6 கோடி வசூல் செய்ய, தமிழகத்தில் 25 கோடி உலகம் முழுவதும் இப்படம் ரூ 35 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தீபாவளிக்கு வசூலை வாரிக்குவிக்கும் எதிர்பார்க்கப்பட்ட படம் எதிர்பார்த்த கலெக்ஷனை பெறவில்லை. சிவகார்த்திகேயனின் தோல்வி படங்களான மிஸ்டர் லோக்கல், சீமராஜா பட வரிசையில் பிரின்ஸ் படம் இணைந்துள்ளது. தீபாவளியை முன்னிட்டு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், வசூல் அதிகரிக்குமா? இல்லை குறையுமா? என்பது தெரியவரும்.

மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்

மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்

தீபாவளிக்கு சர்தார், பிரின்ஸ் படங்கள் வெளியான போது, செப்டம்ர் 30ந் தேதி வெளியான பொன்னியின் செல்வன் ஹவுஸ்புல்லாகவே இருக்கிறது. தமிழ் திரைப்படம் பல திரையரங்கில் 90% வரையிலும் முன்பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. விடுமுறை நாட்களில் வசூல் சிறப்பாக இருப்பதால் படம் எப்படியும் 500 கோடியை இந்த வாரத்தில் கடந்து விடும் என்று நம்பப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X