தீபாவளி ரிலீஸை கன்ஃபார்ம் செய்த பிரின்ஸ்… சிவகார்த்திகேயன் ரசிகாஸ்லாம் சம்பவம் பண்ண ரெடியா?
சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது அனுதீப் இயக்கத்தில் பிரின்ஸ் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ள பிரின்ஸ் தீபாவளிக்கு வெளியாகும் என படக்குழு கன்ஃபார்ம் செய்துள்ளது.
சிவகார்த்தியேனின் பிரின்ஸ், கார்த்தியின் சர்தார் படங்கள் தீபாவளி ரேஸில் இணைந்துள்ளன.

SK காட்டில் அடை மழை
டாக்டர், டான் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது பிரின்ஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கியுள்ள இந்தப் படம், தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகியுள்ளது. பிரின்ஸ் திரைப்படம் மூலம் சிவகார்த்திகேயன் முதன்முறையாக தெலுங்கிலும் அறிமுகமாகிறார். இந்தப் படத்திற்காக அவரே தெலுங்கிலும் டப்பிங் பேசியுள்ளதாக சொல்லப்படுகிறது. சிவகார்த்திகேயனின் படங்களுக்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருப்பதால், நேரடியாகவே இப்போது களமிறங்குகிறார்.

பிரின்ஸ் ரிலீஸ் தேதி கன்ஃபார்ம்
பிரின்ஸ் படத்தின் கதைக்களம் பாண்டிச்சேரியில் தொடங்கி லண்டன், ஃபிரான்ஸ் என பயணிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ரொமாண்டிக்கல் ஜானரில் கமர்சியலாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக உக்ரைன் நாட்டு நடிகை மரியா ரியாபோஷப்கா நடித்துள்ளார். உள்ளூர் நடிகைகளுடன் ஆட்டம் போட்டு வந்த சிவா, முதன்முறையாக ஹாலிவுட் நடிகையுடன் ரொமான்ஸ் செய்யவுள்ளதைப் பார்க்க ரசிகர்களும் வெயிட்டிங்கில் உள்ளனர். இந்தப் படத்தில் சத்யராஜும் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், பிரின்ஸ் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு கன்ஃபார்ம் செய்துள்ளது.

தீபாவளி ரேஸில் சிவகார்த்திகேயன்
பிரின்ஸ் திரைப்படம் தீபாவளிக்கு முன்னதாகவே வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது. இந்நிலையில், தீபாவளிக்கு தான் ரிலீஸ் என தயாரிப்பு நிறுவனம் உறுதி செய்துள்ளது. தீபாவளிக்கு சிவகார்த்தியேனின் பிரின்ஸ் படத்தை கொண்டாட காத்திருங்க என ஸ்மார்ட்டாக ஒரு ட்வீட்டை தட்டியுள்ளது பிரின்ஸ் படக்குழு. இதனால் சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். ஏற்கனவே தமன் இசையில் தாறுமாறாக இரண்டு பாடல்கள் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது.

சர்தாருடன் மோதும் பிரின்ஸ்
கடந்தாண்டு டாக்டர், இந்தாண்டு டான் என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ள சிவகார்த்திகேயன் பிரின்ஸ் படத்தை தைரியமாக தீபாவளிக்கு களமிறக்குகிறார். அதேபோல், விருமன், இப்போது பொன்னியின் செல்வன் படங்கள் மூலம் தெம்பாக உள்ள கார்த்தி, அவரின் சர்தார் திரைப்படத்தையும் தீபாவளிக்கு வெளியிடுகிறார். இப்போதைக்கு சிவகார்த்திகேயனின் பிரின்ஸும் கார்த்தியின் சர்தாரும் மட்டும் தீபாவளி ரிலீஸுக்கு ரெடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











