தீபாவளிக்கு தயாராகும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்.. அடுத்தது என்ன ஆடியோ ரிலீஸ்தான்!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் படங்களை தொடர்ந்து அவரது பிரின்ஸ் படம் ரிலீசுக்கு தயாராகியுள்ளது.

இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இரண்டு பாடல்கள் இதுவரை லிரிக் வீடியோவாக வெளியாகியுள்ளது.

பிரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயன் வாத்தியாராக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவருக்கு உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ஜோடியாகியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் ஆங்கராகத்தான் தன்னுடைய பயணத்தை துவக்கினார். தொடர்ந்து தனுஷுடன் 3 படத்தில் காமெடியனாக களமிறங்கினார். ஆனால் கோலிவுட் அவருக்கு வேறு ஒரு திட்டத்தை வைத்திருந்தது. மெரினா படத்தில் ஹீரோவாக நடித்தார். அந்தப் படம் அவரது சினிமா கேரியரை வெற்றிப்பாதையில் திருப்பியது.

அடுத்தடுத்த வெற்றிப்படங்கள்

அடுத்தடுத்த வெற்றிப்படங்கள்

தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன், தொடர்ந்து தயாரிப்பாளராகவும் தன்னை சிறப்பாக்கிக் கொண்டுள்ளார். டாக்டர், டான் என அடுத்தடுத்த வெற்றிப் படங்களை தயாரிப்பாளராகவும் நடிகராகவும் கொடுத்துள்ளார்.

தீபாவளிக்கு ரிலீசாகும் பிரின்ஸ் படம்

தீபாவளிக்கு ரிலீசாகும் பிரின்ஸ் படம்

தன்னுடைய சொந்தப் படங்களில் மட்டுமில்லாமல் மற்ற தயாரிப்புகளிலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். டாக்டர், டான் படங்களின் வெற்றியை தொடர்ந்து அவரது பிரின்ஸ், அயலான் படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. இதனிடையே பிரின்ஸ் படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 9ல் ஆடியோ ரிலீஸ்

அக்டோபர் 9ல் ஆடியோ ரிலீஸ்

இந்தப் படத்தின் பிம்பிலிக்கி பிலாபி உள்ளிட்ட இரண்டு பாடல்கள் இதுவரை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இந்நிலையில் படத்தின் இசை வெளியீடு வரும் அக்டோபர் 9ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

காமெடி கதைக்களம்

காமெடி கதைக்களம்

அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்தப் படமும் முழுக்க முழுக்க காமெடி களத்தில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் நாயகியாக இணைந்துள்ள மரியா, சிவகார்த்திகேயனுக்கு இணையாக டான்ஸ் ஸ்டெப்ஸ்களை போட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

ரசிகர்களை கவருமா பிரின்ஸ்?

ரசிகர்களை கவருமா பிரின்ஸ்?

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் படம் காமெடி, சென்டிமெண்ட் என அனைத்து தளங்களிலும் சிறப்பாக ரசிகர்களை கவர்ந்தது. வசூல்ரீதியாகவும் மிரட்டியது. இந்நிலையில் பிரின்ஸ் படமும் அதேபோன்ற வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X