வேறலெவல் பிசினஸ்.. மாஸ் காட்டும் பிரின்ஸ்.. டிஜிட்டல் உரிமம் மட்டும் எத்தனை கோடி தெரியுமா?

சென்னை: விஜய், தனுஷ் வரிசையில் நடிகர் சிவகார்த்திகேயனும் தெலுங்கு இயக்குநர் படத்தில் நடித்துள்ள பிரின்ஸ் படம் மற்ற இருவரது படங்களையும் முந்திக் கொண்டு முதலில் இந்த தீபாவளிக்கு வருகிறது.

இயக்குநர் அனுதீப் கே.வி. இயக்கத்தில் வெளியான ஜதி ரத்னலு திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

இந்நிலையில், அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் உக்ரைன் நடிகை மரியா நடித்துள்ள பிரின்ஸ் படத்தின் டிஜிட்டல் உரிமம் பெரிய தொகைக்கு விற்பனை ஆகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரேஞ்சே வேற

ரேஞ்சே வேற

சிவகார்த்திகேயனுக்கு முன்பாகவே ஏகப்பட்ட இளம் நடிகர்கள் தமிழ் சினிமாவில் இருந்து வந்தாலும், வந்த 10 வருடங்களில் விஸ்வரூப வளர்ச்சியை அடைந்திருக்கிறார் சிவகார்த்திகேயன். சாதாரண காமெடியனாக விஜய் டிவிக்குள் நுழைந்த சிவகார்த்திகேயன், தொகுப்பாளர், நடிகர் என ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து இன்று பாக்ஸ் ஆபிஸ் கிங்காக மாறி உள்ளார்.

தீபாவளிக்கு பிரின்ஸ்

தீபாவளிக்கு பிரின்ஸ்

சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் டான் என அடுத்தடுத்து இரு படங்களும் 100 கோடி கிளப்பில் இணைந்த நிலையில், வரும் தீபாவளிக்கு தனது பிரின்ஸ் படத்தை இறக்க திட்டமிட்டுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். டோலிவுட் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் - தெலுங்கு பைலிங்குவல் படமாக உருவாகி வரும் பிரின்ஸ் படம் மிகப்பெரிய வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்ப்படுகிறது.

42 கோடிக்கா

42 கோடிக்கா

விஜய் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் உடன் நடிகர் சிவகார்த்திகேயன் மிகவும் நெருக்கமான உறவை கொண்டிருக்கிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் போஸ்ட் தியேட்டரிக்கல் டிஜிட்டல் ரிலீஸ் மிகப்பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிகபட்சமாக 42 கோடி ரூபாய்க்கு டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் அந்த படத்தை வாங்கி உள்ளதாக கூறுகின்றனர்.

பாட்டு ஹிட்

பாட்டு ஹிட்

ஏற்கனவே தமன் இசையில் அனிருத் குரலில் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தில் இருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிளான பிம்பிலிக்கி பிலாப்பி பாடல் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அந்த பாட்டில் சிங்கிள் டேக்கில் சிறப்பாக சிவகார்த்திகேயன் நடனமாடும் வீடியோவும் அவருடன் சேர்ந்து உக்ரைன் நாட்டு நடிகை மரியா நடனமாடும் வீடியோவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அடுத்து மாவீரன்

அடுத்து மாவீரன்

பிரின்ஸ் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். மாவீரன் படத்தை முடித்து விட்டு கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X