செப்டம்பர் 1ம் தேதி வெளியாகும் பிரின்ஸ் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்.. அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்த டாக்டர், டான் வெற்றிப் படங்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றன.
இதையடுத்து அவரது பிரின்ஸ் படம் வரும் தீபாவளி ரிலீசாக திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படமும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
படத்தின் சூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில், தற்போது படத்தின் முக்கியமான அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களின் வரிசையில் இடம் பெற்றுள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இவரது டாக்டர், டான் படங்கள் அதிரி புதிரி வெற்றிகளை கொடுத்து 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்தன.

டான் படம்
குறிப்பாக சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டான் படம் சிவகார்த்திகேயனுக்கு நடிகராகவும் தயாராப்பாளராகவும் சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவரது நடிப்பில் பிரின்ஸ், மாவீரன், அயலான் என ரிலீசுக்கு படங்கள் வரிசைக் கட்டியுள்ளன.

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்
மேலும் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்திலும் அடுத்தப்படத்தில் கமிட்டாகியுள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடி சேர்ந்துள்ளார் சாய் பல்லவி. விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது. தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

பிரின்ஸ் படம்
இவருடைய பிரின்ஸ் படம் வரும் தீபாவளியில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தெலுங்கின் பிரபல இயக்குநர் அனுதீப் இயக்கியுள்ள நிலையில், படத்தில் உக்ரைன் நாட்டு நடிகை மரியா சிவகார்த்திகேயனுக்கு ஜோடி சேர்ந்துள்ளார். படத்தில் சிவகார்த்தியேகன் மற்றும் மரியா இருவரும் ஆசிரியர்களாக நடித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீபாவளி ரிலீஸ்
வரும் தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் பிரமோஷன்களை தற்போதே துவங்கியுள்ளது படக்குழு. வரும் செப்டம்பர் 1ம் தேதி படத்தில் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் இசையை தமன் மேற்கொண்டுள்ள நிலையில் படத்தின் இசை சிறப்பாக அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜாலி பெப்பி நம்பராக இந்தப் பாடல் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

சிறப்பான விலைபோன சேட்டிலைட் உரிமம்
இந்நிலையில் படம் வெளியாவதற்கு முன்னதாகவே படத்தின் சேட்டிலைட் உரிமையை பிரபல சேனலான விஜய் டிவி அதிக விலைக்கு கைப்பற்றியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல டிஜிட்டல் ரைட்ஸை டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











