பிரின்ஸ் படத்தின் அடுத்த அப்டேட் வெயிட்டிங்.. நாளை வரை காத்திருக்கணும் மக்களே!
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் வெளியான நிலையில் அடுத்ததாக பிரின்ஸ் படம் வெளியாகவுள்ளது.
தீபாவளி ரிலீசாக வெளியாகவுள்ள இந்தப் படத்தை அனுதீப் இயக்கியுள்ளார். இவர் தெலுங்கில் ஜதி ரத்னலு என்ற படம் மூலம் கவனம் ஈர்த்தவர்.
இந்நிலையில் பிரின்ஸ் படத்தின் அடுத்த அப்டேட் நாளைய தினம் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் காட்டில் தற்போது மழைதான் பெய்து வருகிறது. டாக்டர் படத்தில் ஆரம்பித்த இவரது வெற்றி, டான் படத்திலும் தொடர்ந்து. இரண்டு படங்களையும் சிவகார்த்திகேயனே தயாரித்த நிலையில் இரு படங்களுமே 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்து அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது.

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்
இந்தப் படங்களை தொடர்ந்து உற்சாகமாக தனது அடுத்தடுத்த படங்களை கமிட் செய்து நடித்து வருகிறார். அடுத்தப்படமாக பிரின்ஸ், மாவீரன் படங்கள் வெளியாக உள்ளன. இதில் பிரின்ஸ் படம் வரும் தீபாவளிக்கு திரையிடப்பட உள்ளது. இந்தப் படத்தை ஜதி ரத்னலு என்ற தெலுங்குப் படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த அனுதீப் இயக்கியுள்ளார்.

தமனுடன் முதல்முறையாக கூட்டணி
படத்தில் சிவகார்த்திகேயன் வாத்தியாராக நடித்துள்ள நிலையில் அவருக்கு உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியாபோஷப்கா ஜோடி சேர்ந்துள்ளார். மேலும் இந்தப் படத்தின்மூலம் இசையமைப்பாளர் தமன் சிவகார்த்திகேயனுடன் முதல்முறையாக கூட்டணி அமைத்துள்ளார். இதனால் இந்தப் பாடல்கள் மிகவும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நாளை புதிய அப்டேட்
இந்நிலையில் இந்தப் படத்தின் அடுத்த அப்டேட் நாளைய தினம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அது படத்தின் முதல் சிங்கிள் குறித்த அறிவிப்பாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து தற்போது ட்விட்டரில் ட்ரெண்டிங்கில் சிவகார்த்திகேயன் காணப்படுகிறார்.

அடுத்தடுத்த படங்கள்
நடிகர் சிவகார்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து மாவீரன் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கில் விறுவிறுப்பாக பங்கேற்று வருகிறார் சிவகார்த்திகேயன். பிரின்ஸ், மாவீரன் இரண்டு படங்களுமே தமிழ், தெலுங்கில் இருமொழிப் படங்களாக ரிலீசாக உள்ளன. இதையடுத்து கமலின் தயாரிப்பிலும் இவர் இணையவுள்ளார்.


Click it and Unblock the Notifications











