பிரின்ஸ் படத்தோட ரிலீஸ் தேதி எப்பன்னு தெரியுமா.. கலக்கல் காம்போவில் வெளியாகும் படம்

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் படங்கள் மிகப்பெரிய வெற்றியை அவருக்கு பரிசாக கொடுத்துள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் பிரின்ஸ் படம் தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் அவருக்கு உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நாயகியாகியுள்ளார்.

மேலும் படத்தில் சத்தியராஜ் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள நிலையில், படம் தீபாவளியையொட்டி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் காட்டில் தற்போது மழைதான். அவரது அடுத்தடுத்த படங்கள் டாக்டர், டான் சிறப்பான வெற்றியை அவருக்கு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் கொடுத்துள்ளது. தொடர்ந்து அவர் அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். இந்தப் படங்களும் அவருக்கு வெற்றியைத்தான் கொடுக்கும் என்று அவரது ரசிகர்கள் கையிலடித்து சத்தியம் செய்து வருகின்றனர்.

பிரின்ஸ் படம்

பிரின்ஸ் படம்

அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ், அயலான் படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில், தீபாவளியையொட்டி பிரின்ஸ் படம் ரிலீசாகவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் டீச்சராக நடித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

காமெடி கதைக்களம்

காமெடி கதைக்களம்

சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் படத்தில் ஜோடியாகியுள்ளார் உக்ரைன் நாட்டை சேர்ந்த மரியா ரியாபோஷப்கா. படம் முழுக்க முழுக்க காமெடி கதைக்களத்தில் உருவாகியுள்ளதாம். காமெடி என்றாலே சிவகார்த்திகேயனுக்கு மிகவும் சிறப்பாக அமையும். அந்த வகையில் இந்தப் படமும் அவருக்கு சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

முக்கியமான கேரக்டரில் சத்யராஜ்

முக்கியமான கேரக்டரில் சத்யராஜ்

பிரின்ஸ் படத்தில் முக்கியமான கேரக்டரில் சத்யராஜ் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் முன்னதாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது மீண்டும் இணைந்துள்ளனர். இந்தப் படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக முன்னதாக வீடியோ மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அக்டோபர் 21ம் தேதி ரிலீஸ்?

அக்டோபர் 21ம் தேதி ரிலீஸ்?

இந்நிலையில் படம் அக்டோபர் 21ம் தேதி ரிலீசாக உள்ளதாக இயக்குநர் அனுதீப் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் ரிலீஸ் செய்யவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனுக்கு தெலுங்கில் சிறப்பான மார்க்கெட் உள்ள நிலையில் அங்கு இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கலாம்.

மரியா மகிழ்ச்சி

மரியா மகிழ்ச்சி

இந்தப் படத்தில் இணைந்துள்ள மரியா படம் குறித்தும் அதன் நடிகர்கள் குறித்தும் முன்னதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ள நிலையில், தான் தமிழ் கற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார். தமன் இசையமைத்துவரும் இந்தப் படத்தின் பிம்பிலிக்கி பாடல் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

 எதிர்பார்ப்பில் பிரின்ஸ் படம்

எதிர்பார்ப்பில் பிரின்ஸ் படம்

டாக்டர், டான் படங்களின் தொடர் வெற்றியை தொடர்ந்து பிரின்ஸ் படத்திற்கும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தப் படமும் அவருக்கு சிறப்பான வெற்றியை தந்து ஹாட்ரிக் வெற்றியை அவர் பெறுவார் என்று எதிர்பார்க்கலாம். அடுத்ததாக அவரது நடிப்பில் அயலான் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X