பிரின்ஸ் பாக்ஸ் ஆஃபிஸ்: முதல்நாள் வசூலில் கெத்து காட்டிய சிவகார்த்திகேயன்... இனிதான் ஆட்டம் ஆரம்பம்

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான பிரின்ஸ் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.

ஆனாலும், முதல் நாளில் கார்த்தியின் சர்தாரை விட வசூலில் கெத்து காட்டியுள்ளது சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்.

முதல் நாளில் பிரின்ஸ்

முதல் நாளில் பிரின்ஸ்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் தீபாவளியை முன்னிட்டு நேற்று உலகம் முழுவதும் வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்தப் படத்தில், மரியா, சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தெலுங்கில் வெளியான ஜதி ரத்னலு படம் மூலம் கவனம் ஈர்த்த, அனுதீப் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். மொத்தமாகவே 4 கோடி பட்ஜெட்டில் வெளியான ஜதி ரத்னலு, 70 கோடி வசூலித்து, சிறப்பான வரவேற்பை பெற்றது. அந்த நம்பிக்கையில் பிரின்ஸ் படத்தில் அனுதீப் உடன் கூட்டணி வைத்தார் சிவகார்த்திகேயன். ஆனால், அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தான் கொடுத்துள்ளது.

முதல் நாள் வசூல்

முதல் நாள் வசூல்

இந்தாண்டு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்துடன், கார்த்தியின் சர்தாரும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. தீபாவளி ரேஸில் வேறு எந்த படங்களும் வெளியாகாததால் பிரின்ஸ், சர்தார் இரண்டுமே வசூலில் சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி பிரின்ஸ் படத்துக்கு முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 5 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகவும், இந்தியா முழுவதும் 6 கோடி வசூல் செய்திருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், உலகம் முழுவதும் மொத்தம் 9 முதல் 10 கோடி ரூபாய் கலெக்‌ஷன் கிடைத்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் அமெரிக்காவில் பிரின்ஸ் படத்தை விட கார்த்தியின் சர்தார் தான் ரேஸில் முதல் இடத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இனிதான் போட்டி

இனிதான் போட்டி

இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்துக்கு முதல் நாளில் இருந்தே எதிர்பார்த்த விமர்சனங்கள் கிடைக்கவில்லை. நல்ல ஓப்பனிங் கிடைத்தாலும், மோசமான கதை, திரைக்கதையால் தீபாவளிப் போட்டியில் திணறி வருவதாக சொல்லப்படுகிறது. கலக்கப் போவது யாரு, மதுரை முத்துவின் ப்ராப்பர்ட்டி காமெடி, குக் வித் கோமாளி போன்ற ரியாலிட்டி ஷோ மாதிரி, பிரின்ஸ் படம் இருப்பதாக ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். மேலும், சிவகார்த்திகேயனின் நடிப்பும் ரசிகர்களுக்கு திருப்தியளிக்கவில்லை. இதனால், அடுத்தடுத்த நாட்களில் பிரின்ஸ் வசூல் மோசமாகும் எனக் கூறப்படுகிறது.

லாபமா நஷ்டமா?

லாபமா நஷ்டமா?

பிரின்ஸ் திரைப்படம் மொத்தம் 60 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. அதேநேரம், ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட வகைகளில் 50 கோடி ரூபாய்க்கு பிசினஸ் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனால், போட்ட முதலுக்கு மோசம் இல்லாமல் பிரின்ஸ் தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்துவிடும். ஆனால், சிவகார்த்திகேயன் படங்களில் இது கொஞ்சம் மோசமான விமர்சனம் பெற்றுள்ளது அவரது அடுத்த படங்களுக்கு சிக்கலை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே கார்த்தியின் சர்தார் படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளதால், இனிவரும் நாட்களில் பிரின்ஸ் வசூல் பாதிக்கப்படும் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X