பிரின்ஸ் பாக்ஸ் ஆஃபிஸ் 5வது நாள்… ரசிகர்களை ஏமாற்றிய சிவகார்த்திகேயன்

சென்னை: சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான பிரின்ஸ் படத்துக்கு போட்டியாக கார்த்தியின் சர்தாரும் திரையரங்குகளில் ரிலீஸானது.

முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்த சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், அடுத்தடுத்த நாட்களில் தொடர்ந்து சரிவை சந்தித்துள்ளது.

ஏமாற்றிய பிரின்ஸ்

ஏமாற்றிய பிரின்ஸ்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள பிரின்ஸ் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு அக் 21ம் தேதி வெளியானது. தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்தப் படத்தை அனுதீப் இயக்கியுள்ளார். ஜதி ரத்னலு படம் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த அனுதீப், பிரின்ஸில் சிவகார்த்திகேயனின் வழக்கமான காமெடியை மட்டும் மொத்த கதையாக மாற்றி ஏமாற்றிவிட்டார் என ரசிகர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளதால், பிரின்ஸுக்கு முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்தது. ஆனால், அதன்பிறகு நிலைமை மோசமாகிவிட்டது.

பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

பிரின்ஸ் திரைப்படத்திற்கு முதல் நாளில் நல்ல ஓப்பனிங் கிடைத்ததால், 7 முதல் 8 கோடி வரை வசூலித்தது. ஆனால், நெகட்டிவான விமர்சனங்கள், மோசமான மேக்கிங் ஆகியவற்றால் அடுத்தடுத்த நாட்களில் வசூல் சரியத் தொடங்கியது. முதல் மூன்று நாட்களில் 16 முதல் 17 கோடி வரை கலெக்‌ஷன் செய்த பிரின்ஸ், 5 நாட்களில் மொத்தமே 35 கோடி வரை வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், தீபாவளி விடுமுறை நேற்றுடன் முடிவடைந்ததால், இனிவரும் நாட்களில் பிரின்ஸ் படத்துக்கு வரவேற்பு கிடைக்க வாய்ப்பில்லை எனவும் கூறப்படுகிறது.

நெகட்டிவான விமர்சனம்

நெகட்டிவான விமர்சனம்

மொத்தம் 35 கோடி வரை வசூல் செய்துள்ள பிரின்ஸ், தமிழ்நாட்டில் மட்டும் 24 கோடி வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. தொடர்ச்சியாக 4 நாட்கள் தீபாவளி விடுமுறை இருந்தும் பிரின்ஸ் வசூல் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்தாண்டு வெளியான டாக்டர், சில மாதங்களுக்கு முன் வெளியான டான் ஆகிய படங்கள், சிவகார்த்திகேயனுக்கு வசூலில் நன்றாகவே கை கொடுத்தது. ஆனால், பிரின்ஸ் வசூலில் மட்டும் இல்லாமல் விமர்சன ரீதியாகவும் நெகட்டிவாக அமைந்துள்ளது, அவரது அடுத்த படத்துக்கான பிசினஸை பாதிக்கும் எனக் கூறப்படுகிறது.

டேபிள் பிராஃபிட்

டேபிள் பிராஃபிட்

பிரின்ஸ் படத்திற்கு திரையரங்குகளில் வசூல் குறைந்துகொண்டே சென்றாலும், தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்துள்ளதாம். 60 கோடி பட்ஜெட்டில் தயாரான பிரின்ஸ், ஓடிடி ரைட்ஸ், சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட வகைகளில் 50 கோடி ரூபாய்க்கும் மேல் பிசினஸ் பார்த்துவிட்டதாக சொல்லப்படுகிறது. தியேட்டரில் வசூல் குறைந்தாலும், டேபிள் பிராஃபிட் வகையில் சிவகார்த்திகேயன் தப்பி பிழைத்துள்ளார். அதேநேரம், சிவகார்த்திகேயன் ஒரே மாதிரியான கதைகள் தேர்ந்தெடுப்பதாகவும், அவரது நடிப்பிலும் வித்தியாசம் இல்லையென்றும் ரசிகர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X