Seyon - சிவகார்த்திகேயன் பிறந்தநாள் பரிசு.. பட்டாசாக வெளியானது சேயோன் க்ளிம்ப்ஸ்.. எஸ்கே மிரட்டுறாரு
சென்னை: தாய் கிழவி படத்தை பார்த்து இம்ப்ரெஸ் ஆன சிவகார்த்திகேயன்; அதன் இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சேயோன் படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார். கமல்ஹாசன் இரண்டாவது முறையாக சிவாவை வைத்து தயாரிக்கிறார். நேற்று படத்தின் டைட்டில் வெளியான சூழலில்; இன்று சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் க்ளிம்ப்ஸ் காட்சிகளை வெளியிட்டு சர்ப்ரைஸ் செய்திருக்கிறது படக்குழு.
சிவகார்த்திகேயன் இப்போது ஃபுல் ஃபார்மில் இருக்கிறார். அமரன் வெற்றி அவருக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்தது. அந்த வெற்றிக்கு பிறகு அவர் நடித்த பராசக்தி, மதராஸி ஆகிய இரண்டு படங்களும் விமர்சன ரீதியாக கொஞ்சம் டல்லடிக்கத்தான் செய்தன. அதேசமயம் வசூலில் மாஸ் காண்பித்தன. மதராஸி திரைப்படம் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்தது; பராசக்தி திரைப்படமோ 100 கோடி ரூபாயை அள்ளி தரமான சம்பவத்தை செய்தது.
தாய் கிழவியில் இம்ப்ரெஸ்: இதற்கிடையே தனது எஸ்கே புரொடக்ஷன்ஸ் மூலம் நல்ல நல்ல படங்களையும் தயாரித்து; பல புதுமுக படைப்பாளிகளை திரையுலகத்துக்கு அறிமுகமும் செய்துவைக்கிறார். அந்தவகையில் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் ராதிகாவை வைத்து தாய் கிழவி படத்தை தயாரித்திருக்கிறார். இப்படமானது 27ஆம் தேதி ரிலீஸாகிறது. ரிலீஸுக்கு முன்னர் படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் ரொம்பவே ஈர்க்கப்பட்டுவிட்டார்.

சிவகார்த்திகேயனின் சேயோன்: சிவக்குமாரின் திறமையால் ஈர்க்கப்பட்டதால்; வெங்கட் பிரபு படத்துக்கு முன்னதாக அவரது இயக்கத்தில் நடிக்க கமிட்டானார். படத்துக்கு சேயோன் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசன் இப்படத்தை தயாரிக்கிறார். நேற்று படத்தின் பெயரோடு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது. படத்தின் பெயரை வைத்து பார்க்கையில் இதில் அவர் முருக பக்தராக நடித்திருப்பாரோ என்று பலரும் பேச ஆரம்பித்தார்கள்.
வெளியான க்ளிம்ப்ஸ்: இந்நிலையில் இன்று அவர் தனது 41ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அதனையொட்டி அவரது ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசாக சேயோன் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் சிவகார்த்திகேயன் சாமி ஆடியபடி காவல் நிலையத்துக்கு வந்து; தன்னை தாக்க வந்தவர்களை தாக்குவது போன்று காட்சிகள் இடம்பெற்றிருக்கின்றன. இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். மேலும் இந்த க்ளிம்ப்ஸை பார்க்கையில் இப்படம் பக்கா கிராமத்து படமாக உருவாகும் என்று தெரிகிறது.
கண்டிப்பாக பந்தயம் அடிக்கும்: குறிப்பாக கிளிம்ப்ஸில் சிவாவின் நடிப்பு மிரட்டும்படி இருக்கிறது. அவர் கிராமத்து இளைஞர் வேடத்தில் நடித்து நீண்ட காலம் ஆகிவிட்டது. இதில் அந்த வேடத்தை ஏற்றிருக்கிறார் என்பதை க்ளிம்ப்ஸ் காட்சிகள் உணர்த்துகின்றன. எனவே இப்படம் கண்டிப்பாக பந்தயம் அடிக்கும் என்று எஸ்கே ரசிகர்கள் இப்போதே உறுதியாக சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். அதுமட்டுமின்றி கமல் - சிவகார்த்திகேயன் கூட்டணி மீண்டும் வெற்றியை சுவைக்குமா என்பது தற்போது கோலிவுட்டின் பெரிய எதிர்பார்ப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











