பாண்டிச்சேரியில் சூட்டிங்... சிவகார்த்திகேயனுடன் இணைந்த சூரி... எஸ்கே20யின் அடுத்தடுத்த அப்டேட்!
பாண்டிச்சேரி : நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் எஸ்கே20 படத்தின் சூட்டிங் தற்போது பாண்டிச்சேரியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நடிகர் சூரியும் சிவகார்த்திகேயனுடன் இணைந்துள்ளார். படத்தில் பிரேம்ஜி சிவாவிற்கு வில்லனாகியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் டாக்டர் படம் சூப்பர் ஹிட்டாகியுள்ள நிலையில், அடுத்ததாக அவர் டான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தில் அவர் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். படத்தில் எஸ்ஜே சூர்யா, பிரியங்கா மோகன், சிவாங்கி உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

எஸ்கே20 படத்தின் சூட்டிங்
காமெடியை மையமாக கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ள நிலையில் விரைவில் திரையரங்குகளில் படம் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தையும் சிவகார்த்திகேயனே தயாரித்துள்ளார். இதையடுத்து தற்போது அனுதீப் இயக்கத்தில் எஸ்கே20 படத்தின் பூஜை போடப்பட்டு தற்போது பாண்டிச்சேரியில் சூட்டிங் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து காரைக்குடியிலும் படப்பிடிப்பை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

உக்ரைன் நடிகை
இந்தப் படத்தில் புதிய மற்றும் அழகான இணைப்பாக உக்ரைன் நடிகையும் மாடலுமான மரியா இணைந்துள்ளார். இதுகுறித்து படக்குழு உறுதி செய்துள்ளது. மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பிறகு நடிகர் சத்யராஜுடன் இணைந்து சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் -சூரி கூட்டணி
சிறப்பான கூட்டடணியாக இருந்துவரும் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கூட்டணி இந்தப் படத்திலும் உள்ளது. இதேபோல இந்தப் படத்தில் பிரேம்ஜி முதல்முறையாக வில்லனாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கில் உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார்.

தமிழ் ஆசிரியர்
படத்தில் தமிழ் ஆசிரியராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இதேபோல வெளிநாட்டிலிருந்து இங்கு வரும் நாயகியை காதலித்து கைப்பிடிக்கும் வகையில் கதைக்களம் உள்ளதாகவும், படத்தில் காமெடி தூக்கலாக இருக்கும் என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











