ஒரே நேரத்தில் சூட்டிங்.. சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள்.. சூப்பர் ட்ரீட்தான்!

சென்னை : சிவகார்த்திகேயனின் அடுத்தப்படம் எஸ்கே 20 வரும் ஆகஸ்ட் 31ம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக அவரது டாக்டர், டான் படங்கள் 100 கோடி க்ளப்பில் இணைந்துள்ளன. இந்நிலையில் இந்தப் படமும் சிறப்பான வெற்றியை பெற்று அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கமல் தயாரிப்பில் அவர் நடிக்கும் எஸ்கே 22 படத்தின் சூட்டிங் இன்னும் சில மாதங்களில் துவங்கவுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி சமீப காலங்களில் கோலிவுட்டில் அனைவரையும் மிரட்டி வருகிறது. டாக்டர் மற்றும் டான் என இரண்டு வெற்றிப்படங்களை அடுத்தடுத்து குறுகிய காலகட்டங்களில் ரிலீஸ் செய்து இரண்டு படங்களையும் 100 கோடி க்ளப்பில் சேர்த்துள்ளார். அடுத்த வீட்டு பையன் போன்ற லுக் எப்போதுமே நடிகர்களுக்கு கைக்கொடுக்கும் என்பதற்கு சிவகார்த்திகேயன் சிறப்பான உதாரணம்.

குறுகிய கால அபார வெற்றி

குறுகிய கால அபார வெற்றி

குறுகிய காலகட்டத்திலேயே இவர் சிறப்பான இடத்தை அடைந்துள்ளார். நடிப்பை மட்டுமின்றி தன்னுடைய தயாரிப்பையும் சிறப்பாக செய்து வருகிறார். டாக்டர் மற்றும் டான் இரண்டு படங்களையும் இணை தயாரிப்பாக இவர் செய்துள்ளார். அடுத்த புரொடக்ஷன்களிலும் நடித்து வருகிறார்.

ஆகஸ்ட் 31ல் வெளியாகும் எஸ்கே20

ஆகஸ்ட் 31ல் வெளியாகும் எஸ்கே20

அடுத்ததாக இவரது கிட்டியில் அயலான், எஸ்கே20 உள்ளிட்ட படங்கள் ரிலீசுக்கு தயாராகியுள்ளன. இதில் எஸ்கே20 வரும் ஆகஸ்ட் 31ம் தேதி ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பெயர்கூட வைக்கப்படாத இந்தப் படத்தின் ரிலீஸ் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அயலான் படமும் ரிலீசுக்கு ரெடி

அயலான் படமும் ரிலீசுக்கு ரெடி

இந்நிலையில் சயின்ஸ் பிக்ஷனாக உருவாகியுள்ள அயலான் படமும் இந்த ஆண்டிற்குள் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் சிஜி வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் விரைவில் ரிலீசாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்

கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்

இந்நிலையில் தற்போது கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பிலும் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி படத்தில் இணைந்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் வரும் செப்டம்பர் மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது சிவகார்த்திகேயனின் 21வது படம்.

ஒரே நேரத்தில் 2 படங்கள் சூட்டிங்

ஒரே நேரத்தில் 2 படங்கள் சூட்டிங்

இதனிடையே எஸ்கே 22 படத்தின் சூட்டிங்கும் செப்டம்பர் மாதத்திலேயே துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இரண்டு படங்களில் சூட்டிங்கும் ஒரே நேரத்தில் நடக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமந்தாவும் இந்த லிஸ்ட்டில் உள்ளார்.

மண்டேலா இயக்குநர்

மண்டேலா இயக்குநர்

இவர்களில் யார் சிவகார்த்திகேயனுடன் ஜோடி சேர்வார்கள் என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மண்டேலா படத்தை இயக்கிய மடோன் அஸ்வின் இந்தப் படத்தை இயக்கவுள்ளார். இந்தப் படமும் காமெடி ஜானரில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஏஜிஎஸ் நிறுவனம் சார்பில் கல்பாத்தி அகோரம் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X