புதிதாக திருமணமான நடிகையை திடீரென சந்தித்த சிவகார்த்திகேயன்
சென்னை : சிவகார்த்திகேயன், வளர்ந்து வரும் சூப்பர் ஸ்டார் என சமீபத்தில் நடந்த விழாவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் புகழ்ந்து பேசினார். அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் புகழடைந்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் திருமணமான நடிகை நிரஞ்சனா அகத்தியன் - டைரக்டர் தேசிங்கு பெரியசாமி ஜோடியை சிவகார்த்திகேயன் திடீரென சந்தித்துள்ளார். நிரஞ்சனாவின் சகோதரியும், குக் வித் கோமாளி பிரபலமுமான கனியும் இந்த சந்திப்பின் போது உடன் இருந்துள்ளார்.
இந்த திடீர் சந்திப்பின் போது இவர்கள் எடுத்துக் கொண்ட செல்ஃபி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த ஃபோட்டோவை ட்விட்டரில் வெளியிட்ட நிரஞ்சனா, இந்த பூமியிலேயே இவ்வளவு நல்லவர் எப்படி இருக்க முடியும்.இந்த நீண்ட உரையாடல் மற்றம் நினைவுகளுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஃபோட்டோவை ஏராளமானோர் லைக் செய்தும், ரீட்வீட் செய்தும் வருகின்றனர். சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











