விஜய்யின் தலைவா படத்திற்காக சிவகார்த்திகேயன் போட்ட சபதம்.. என்னன்னு பாருங்க!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் வெற்றிகரமான நாயகனாக மாறியுள்ளார். அவரது அடுத்தடுத்த படங்கள் வெற்றி பெற்று வருகின்றன.

டாக்டர், டான் வெற்றிகளை தொடர்ந்து அடுத்ததாக அவரது பிரின்ஸ் படம் வெளியாக உள்ளது.

ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக காணப்படுகிறார் சிவகார்த்திகேயன். படங்களின் ரிலீஸ், பிறந்தநாள் வாழ்த்து என உடனுக்குடன் அவர் ட்வீட் செய்து வருகிறார்.

விஜய் டிவி ஆங்கர்

விஜய் டிவி ஆங்கர்

விஜய் டிவியில் ஆங்கராக தன்னுடைய பயணத்தை துவக்கியவர் சிவகார்த்திகேயன். தன்னிடம் இருந்த மிமிக்ரி என்ற திறமையைக் கொண்டு விஜய் டிவியில் இணைந்த இவர், பல ஷோக்களை ரசிகர்களுக்கு கொடுத்து ஏராளமான ரசிகர்களை தன் வசப்படுத்தினார். இந்த ஷோக்களே இவருக்கு சினிமா வாய்ப்பையும் தேடிக் கொடுத்தது.

காமெடி நடிகராக அறிமுகம்

காமெடி நடிகராக அறிமுகம்

முதலில் தனுஷுடன் இணைந்து 3 என்ற படத்தில்தான் நடித்தார் சிவகார்த்திகேயன். இந்த ஒரு படத்தில்தான் காமெடி நடிகராக நடித்தார். ஆனால் தொடர்ந்து மெரினா உள்ளிட்ட படங்களில் காமெடி களத்துடன் இணைந்த திரைக்கதையில் நடித்து சக்சஸ் பெற்றார். வருத்தப் படாத வாலிபர் சங்கம் உள்ளிட்ட படங்கள் இவரை ஹீரோவாக மாற்றின.

கோலிவுட்டின் சூப்பர் ஹீரோ

கோலிவுட்டின் சூப்பர் ஹீரோ

இதையடுத்து கோலிவுட்டின் சூப்பர் ஹீரோவாக மாறியுள்ளார் சிவகார்த்திகேயன். இவரது அடுத்தடுத்த படங்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. இவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான டாக்டர் மற்றும் டான் படங்கள் 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்துள்ளன. இதையடுத்து இவரது நடிப்பில் பிரின்ஸ் படம் வெளியாக உள்ளது.

ரிலீசுக்கு காத்திருக்கும் படங்கள்

ரிலீசுக்கு காத்திருக்கும் படங்கள்

அயலான் உள்ளிட்ட படங்களும் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. தன்னுடைய கதைத்தேர்வில் மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். இதனிடையே எப்போதும் சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். மற்ற நடிகர்களின் படங்கள், பிறந்தநாள், தன்னுடைய படங்களின் அப்டேட் என இவர் அடுத்தடுத்த பதிவுகளை வெளியிட்டு வருகிறார்.

ட்விட்டரில் ஆக்டிவ்

ட்விட்டரில் ஆக்டிவ்

இதனிடையே கடந்த 2013லேயே இவர் ட்விட்டரில் மிகவும் ஆக்டிவாக இருந்துள்ளார். கடந்த 2013 ஆகஸ்ட் 9ம் தேதி தலைவா படம் வெளியானது. இன்றைய தினம் படம் வெளியாகி 9 ஆண்டுகளை கடந்து ரசிகர்களின் உற்சாகத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. இந்தப் படம் வெளியாவதில் அப்போது பிரச்சினை இருந்தது.

 தலைவா குறித்து சிவகார்த்திகேயன்

தலைவா குறித்து சிவகார்த்திகேயன்

இந்நிலையில் அன்றைய தினம் சிவகார்த்திகேயன் தலைவா படம் குறித்து பதிவிட்ட ட்வீட் மற்றும் அவரது சபதம் தற்போது வைரலாகி வருகிறது. தலைவா படம் வெளியாகும்வரையில் தான் மற்ற படங்களை பார்க்கப் போவதில்லை என்று அவர் ட்வீட் செய்துள்ளார். தனக்கு உண்மையில் படம் வெளியாவதில் என்ன சிக்கல் என்பது குறித்து தெரியவில்லை என்றும் ஆனால் படம் விரைவில் ரிலீசாகும் என்று நம்புவதாகவும் அவர் அந்த ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.

கைத்தூக்கி விட்ட தனுஷ்

கைத்தூக்கி விட்ட தனுஷ்

சிவகார்த்திகேயன் விஜய் டிவியின் ஆங்கராக இருந்தபோது அவருக்கு தன்னுடைய 3 படத்தில் காமெடி நடிகராக நடிக்கும் வாய்ப்பை கொடுத்து கைத்தூக்கி விட்டவர் தனுஷ். இந்தப் படம் 2012ல் வெளியாகி சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக அமைந்தது. தொடர்ந்து ஹீரோ வாய்ப்புகளையும் பெற்றுத்தந்தது.

தலைவா படத்திற்காக ட்வீட்

தலைவா படத்திற்காக ட்வீட்

ஆனால் விஜய் படத்திற்காக கொலை வெறியுடன் காத்திருப்பதாகவும், அந்தப் படம் வெளியாகும்வரையில் தான் மற்றப் படங்களை பார்க்கப் போவதில்லை என்றும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ள இந்த ட்வீட் விஜய் ரசிகர்களை கவர்ந்துள்ளது. தொடர்ந்து வைரலாகியும் வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X