தடகள வீராங்கனைக்கு சிவகார்த்திகேயன் அளித்த கிஃப்ட்...குவியும் பாராட்டுக்கள்

சென்னை : வீட்டில் ஒருவர், சகோதர் என்ற உணர்வை ஏற்படுத்தக் கூடிய நடிகர் சிவகார்த்திகேயன். இதுவே அவருக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. படங்களில் பிஸியாக இருந்தாலும் சத்தமில்லாமல் பலருக்கும் பல உதவிகளை செய்வதை வழக்கமாக கொண்டவர் சிவகார்த்திகேயன்.

சினிமாவை தாண்டியும் பலருக்கும் அவர் உதவி வருகிறார். அப்படி சமீபத்தில், சஹானா என்ற இளம் பெண்ணின் படிப்பிற்கு சிவகார்த்திகேயன் உதவி செய்துள்ளார். எம்பிபிஎஸ் படிக்க வேண்டும் என்ற கனவில் இருக்கும் சஹானாவிற்கு, நுழைவுத் தேர்விற்கான பயிற்சி பெறும் கட்டணத்தை சிவகார்த்திகேயன் செலுத்தி உள்ளார்.

Sivakarthikeyans valuable gift to gold medalist Dhanalakshmi

இதே போன்று, தேசிய அளவிலான ஓட்டப் போட்டியில் 100 மீட்டர் தொலைவை 11.39 விநாடிகளில் கடந்தார் திருச்சியை சேர்ந்த தனலட்சுமி. தங்க பதக்கம் வென்ற இவருக்கும் சிவகார்த்திகேயன் உதவி செய்துள்ளார். இந்தியாவின் புகழ்பெற்ற தடகள வீராங்கனையான ஹிமா தாசின் சாதனையை இவர் எட்டி உள்ளார்.

தனலட்சுமியை தனது அலுவலகத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்த சிவகார்த்திகேயன், அவரது சாதனையை பாராட்டியதுடன், ஸ்போர்ட்ஸ் ஷூ ஒன்றை பரிசாக வழங்கி உள்ளார். அத்துடன் வருங்காலத்தில் என்ன உதவி தேவைப்பட்டாலும் செய்ய தான் தயாராக உள்ளதாகவும் தனலட்சுமிக்கு வாக்குறுதி அளித்துள்ளார். இந்த தகவல் தெரிந்ததும் சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் படம் மே மாதம் ரிலீசாக உள்ளது. தொடர்ந்து அவர் நடித்த அயலான் படமும் இந்த ஆண்டு இறுதியில் ரிலீசாக உள்ளது. தற்போது, புதுமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் டான் படத்தில் வருகிறார். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்க உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X