சிவகார்த்திகேயன் மனைவி பற்றி பிரபல நடிகை உருக்கம்.. இவ்வளவு நல்ல டைப்பா இருக்காங்களே
சென்னை: சிவகார்த்திகேயன் இப்போது பராசக்தி படத்தில் நடித்துவருகிறார். இதன் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. இதனை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவிருக்கும் அவர்; சினிமாவுக்கு வருவதற்கு முன்பே தனது உறவினர் பெண் ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் ஆர்த்தி பற்றி பிரபல நடிகை தீபா பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
சிவகார்த்திகேயன் சினிமாவில் அறிமுகமானபோது சில படங்களிலேயே காணாமல் போய்விடுவார் என்றுதான் பலரும் கூறினார்கள். ஆனால் இப்போது எஸ்கே டாப் 5 ஹீரோக்களில் ஒருவராக ஜொலித்துக்கொண்டிருக்கிறார். இந்த வெற்றிக்கு அவரது தீவிரமான உழைப்புதான் காரணம். காணாமல் போய்விடுவார் என்று சொன்னவர்கள்தான் இப்போது காணாமல் போய்விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்கேவின் பராசக்தி: அவர் கடைசியாக நடித்த அமரன், மாவீரன், அயலான் ஆகிய மூன்று படங்களுமே ஹிட்டாகின. அதிலும் அமரன் திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் வசூலித்து அசத்தியது. சமீபத்தில்கூட கோவாவில் நடந்த இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் அப்படம் கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. அந்தப் படத்தை முடித்துவிட்டு இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்தில் நடித்துவருகிறார்.

இதுவும் சம்பவம் செய்யும்: இப்படத்தின் மீதும் எஸ்கேவின் ரசிகர்களுக்கு எக்கச்சக்க நம்பிக்கை இருக்கிறது. இப்படமானது ஹிந்தி திணிப்புக்கு எதிராக நடந்த மாணவர்களின் போராட்டத்தை மைய்ப்படுத்தி எடுக்கப்பட்டதாக தெரிகிறது. சமீபத்தில்தான் படத்திலிருந்து ரத்னமாலா என்ற பாடல் வெளியானது. படமானது அடுத்த வருடம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. இப்படத்தை முடித்துவிட்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் குடும்பம்: சினிமாவுக்கு வருவதற்கு முன்பே சிவகார்த்திகேயன் தனது உறவினர் பெண் ஆர்த்தியை திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் இருக்கிறார்கள். எஸ்கேவின் குடும்ப வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருக்கிறது. அவர் பெற்றிருக்கும் வெற்றியும், புகழும் இம்மியளவுகூட குடும்பத்தாரின் தலைக்கு ஏறவில்லை என்பது அவர்களுக்கு நெருக்கமானவர்களின் கூற்றாகும்.
நடிகை தீபா பேட்டி: இந்நிலையில் பிரபல குணசித்திர நடிகை தீபா சிவாவின் மனைவி ஆர்த்தி பற்றி ஒரு பேட்டியில் பேசுகையில், "பணக்காரர்கள் என்றாலே மோசமானவர்கள் என்று நினைத்திருந்தேன். அதையெல்லாம் தூக்கி போட வைத்தது சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்திதான். ஒருமுறை சிவா என்னை வீட்டுக்கு வர சொல்லியிருந்தார். ஆனால் பெரிய நடிகரின் வீட்டுக்கு போகிறோம். அங்கிருக்கும் வாட்ச்மேன் என்னை உள்ளே விடவில்லை என்றால் என்ன செய்வதென்று நினைத்து நான் போகவில்லை.
ஆர்த்தி செய்த செயல்: அதனையடுத்து ஆர்த்தி அவரது பிறந்தநாளுக்கு ஹோட்டலில் சாப்பிட என்னை அழைத்திருந்தார். அங்கே பெரிய நடிகர்கள், நடிகைகள் எல்லாம் வந்திருந்தார்கள். ஆனால் அவர் என் பக்கத்தில் வந்து அமர்ந்து, 'நீங்கள் சாப்பிட வேண்டும். நீங்கள் சாப்பிடும் அழகை நான் பார்க்க வேண்டும்' என சொல்லி எனது அருகில் அமர்ந்து ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார். அதை என் வாழ்க்கையில் மறக்கமாட்டேன்" என்றார்.


Click it and Unblock the Notifications











