Amaran 5th Week Box Office: கொஞ்சமும் சோடை போகாத S.K.வின் அமரன்.. 5வது வாரத்திலும் தாராள வசூல்!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு அதாவது கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் அமரன். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். அமரன் படமானது வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மைய்யமாகக் கொண்டு உருவாக்காப்பட்டது. படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கினார். படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமாரின் இசை மிகவும் பக்கபலமாக இருந்தது. படத்தினை சோனி பிக்சர்ஸ் உடன் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரித்தது. இந்நிலையில் படம் தியேட்டரில் 5 வாரங்கள் வெற்றிகரமாக ஓடியுள்ளது. இதனால் படத்தின் வசூலும் சிறப்பாகவே உள்ளது.

அமரன் படம் வெளியானதில் இருந்து பாராட்டு மழையில் நனைந்தது. குறிப்பாக சாய் பல்லவியின் நடிப்பினை படம் பார்த்த அனைவரும் பாராட்டினார்கள். படம் பார்த்த இந்திய ராணுவத்தினர் சிவகார்த்திகேயனை இந்திய ராணுவத்தில் இணைந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டனர். மேலும் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் தொடங்கி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரை பல அரசியல் தலைவர்கள் படக்குழுவைப் பாராட்டினர்.

sivakarthikeyan sai pallavi amaran box office

அரசியல் தளத்தில் படத்திற்கு பாராட்டும் விமர்சனங்களும் மாறி மாறி வந்து கொண்டு இருந்தது. ஆனால் படத்தினை பொதுமக்கள் கொண்டாடினர். பல ரசிகர்கள் படத்தினை ரிப்பீட் மோடில் தியேட்டரில் பார்த்தவண்ணம் இருந்தனர். இது மட்டும் இல்லாமல், படத்தினைப் பார்த்த பல பெண் ரசிகர்கள் கண்ணீருடன் வெளியே வந்தனர்.

வரவேற்பு: படம் ராணுவ வீரரின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால், தமிழ் நாடு மட்டும் இல்லாமல், இந்தியா முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல் வெளிநாடுகளில் இருக்கும் இந்தியர்கள் மத்தியிலும் படத்திற்கு ஏகபோக வரவேற்பு கிடைத்தது. அதிலும் வெளிநாட்டில் படம் பார்த்த ரசிகர்கள் தங்களின் சமூக வலைதளப்பக்கத்தில் படம் குறித்து பாராட்டி பதிவிட்டனர்.

அதிக வசூல்: படம் இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் கலெக்‌ஷனில் கொடி கட்டிப் பறந்தது. குறிப்பாக வெளிநாடுகளில் சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக வசூல் குவித்த படமாக இது மாறியது. மேலும் படத்தின் வசூல் இந்தியாவிலும் ரூபாய் 200 கோடிகளுக்கு மேல் சென்றது. படம் வெளியானதில் இருந்து இதுவரை 5 வாரங்களை அதாவது வார இறுதிகளை பூர்த்தி செய்துவிட்டது.

5 வார வசூல்: படம் வரும் 5ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ள நிலையிலும் ரசிகர்கள் தொடர்ந்து தியேட்டரில் படத்திற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால் படத்தின் வசூல் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றது. படம் இதுவரை 5 வாரங்கள் ஓடிவிட்டதால் வசூலைப் பொறுத்தவரையில், இந்தியாவில் கிட்டத்தட்ட ரூபாய் 220 கோடிகளும் வெளிநாட்டில் ரூபாய் 110 கோடிகளும் வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் வாட்டாரங்களில் கூறப்படுகின்றது. படத்தின் மொத்த வசூல் ரூபாய் 330 கோடிகளுக்கு மேல் இருக்கும் என கூறப்படுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X