Amaran Box Office: ரூ.300 கோடிகளை அள்ளிய அமரன்.. பாக்ஸ் ஆபிஸ் உச்சத்தில் சிவகார்த்திகேயன்!
சென்னை: சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி நடிப்பில் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படம் அதாவது அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் அமரன். படத்தினை சோனி பிக்சர்ஸ் உடன் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனமும் இணைந்து தயாரித்தது. படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கினார். படம் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றினை மைய்யப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார். படம் வெளியாகி இன்றுடன் அதாவது நவம்பர் 19ஆம் தேதியுடன் 20 நாட்கள் ஆகின்றது. இந்நிலையில் படத்தின் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.

அமரன் குறித்த அறிவிப்பு வந்ததில் இருந்தே படத்தின் மீது ரசிகர்களுக்கு நல்ல அபிப்ராயம் ஏற்பட்டிருந்தது. குறிப்பாக படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் லுக் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தைத் தூண்டியது. சிவகார்த்திகேயன் சினிமா வாழ்க்கையில் இப்படம் மிகப்பெரிய படமாக அமையும் எனவும் சிவகார்த்திகேயனை தமிழ் சினிமாவின் உச்சத்திற்கு கொண்டுபோய் அமர்த்தும் எனவும் பலர் கூறினர். குறிப்பாக படத்தின் ட்ரைலர் வெளியான பின்னர் பலரும் படத்தின் மீது 100 சதவீத வெற்றியை உறுதியாக்கியது.

படம் பெரும் எதிர்பார்ப்பு மத்தியில், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் ரிலீஸ் ஆனது. தீபாவளிக்கு இந்தப் படத்துடன் ஜெயம் ரவியின் பிரதர், கவினின் ப்ளடி பெக்கர் ஆகிய படங்கள் ரிலீஸ் ஆனது. அமரன் நேரடித் தமிழ் படம் என்பதால் தமிழ்நாட்டில் நல்ல வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரத்தில் படத்தின் கரு இந்திய ராணுவத்தினை மைய்யப்படுத்தி இருந்ததால், வெளிமாநிலங்களிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த ஆண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார் என்றே கூறவேண்டும்.

வசூல்: அமரன் முதல் நாளே ரூபாய் 42.3 கோடிகளை அள்ளியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது. இது இதுவரை வெளியான சிவகார்த்திகேயனின் படங்களில் அதிக முதல் நாள் வசூல் படமாக மாறியது. அதேபோல் படம் ரிலீஸ் ஆகி மூன்றே நாட்களில் ரூபாய் 100 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து, சிவகார்த்திகேயன் படங்களிலேயே மூன்றே நாட்களில் ரூபாய் 100 கோடிகளை வசூல் செய்த படமாக மாறியது. பாக்ஸ் ஆபிஸில் படம் தொடர்ந்து வசூல் வேட்டை நடத்திவந்ததால் சிவகார்த்திகேயனை படம் புதிய உச்சத்திற்கே கொண்டு சென்றுள்ளது.

வசூல் மழை: படம் வெளியாகி கடந்த நவம்பர் 9ஆம் தேதியுடன் 10 நாட்கள் ஆனது. அன்றைய தினம் வரை படம் ரூபாய் 200 கோடிகளை உலகம் முழுவதும் வசூல் செய்ததாகபடக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனை சிவகார்த்திகேயன் ரசிகர்கள் இணையத்தில் பெரிய அளவில் கொண்டாடினர். படம் தொடர் வசூல் மழையில் இருந்ததால் பாக்ஸ் ஆபிஸ் தொடர்ந்து நிறைந்து கொண்டே இருந்தது.

300 கோடிகள்: அதேபோல் படம் வெளியாகி 19 நாட்களில் அதாவது, நவம்பர் 18ஆம் தேதிவரை ரூபாய் 295 கோடிகளில் இருந்து ரூபாய் 300 கோடிகள் வரை வசூல் செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. இதில் இந்தியாவில் படம் ரூபாய் 200 கோடிகளும் வெளிநாட்டில் ரூபாய் 100 கோடிகளும் வசூல் செய்ததிருப்பதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் படம் ரூபாய் 300 கோடிகளை வசூல் செய்திருப்பதால் ரசிகர்கள் மத்தியிலும் படக்குழுவினர் மத்தியிலும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



Click it and Unblock the Notifications











