Amaran Box Office Day 4: நாளுக்கு நாள் எகிறும் பாக்ஸ் ஆபீஸ் வசூல்..150 கோடிகளை லோட் செய்யும் அமரன்!
சென்னை: அமரன் படத்தில் சிவகார்த்திகேயன் முகுந்த் வரதராஜனாகவும், அவரது காதல் மனைவி இந்து ரெபேகா வர்கிஸாக சாய் பல்லவியும் நடித்துள்ளனர். வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம்தான் அமரன். இப்படம் தீபாவளி தினத்தில் ரிலீஸ் ஆனது. அதாவது அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆனது. படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படத்திற்கான புக்கிங் ஓபன் ஆனதில் இருந்தே படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. நடப்பாண்டில் இதுவரை வெளியான படங்களிலேயே, புக் மை ஷோ பக்கத்தில் அதிக டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்ட இரண்டாவது தமிழ் படம் என்ற பெருமையப் பெற்றது. படம் வெளியாகி இன்றுடன் 5 நாட்கள் ஆகின்றது. இந்நிலையில் படத்தின் முதல் நான்கு நாள் வசூல் குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
அமரன் படத்தினை சோனி பிக்சர்ஸ் மற்று உலக நாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ளது. படத்தை இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசை அமைத்துள்ளார். படம் ஏற்கனவே கூறியதைப்போல் வீர மரணம் அடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் தமிழ்நாட்டினைச் சேர்ந்தவர். மேலும் இவர் மிகவும் அதிகமான தமிழ் பற்று கொண்டவர்.

படத்தின் கதையை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் ஒப்படைத்து, ஒப்புதல் பெற்ற பின்னர், இந்திய ராணுவத் தளவாடங்களில் படம் எடுக்கப்பட்டுள்ளது. பல காட்சிகளில் இந்திய ராணுவ வீரர்களே காண்பிக்கப்பட்டுள்ளனர். படம் பார்த்த இந்திய ராணுவ வீரர்கள், தமிழ் நாடு முதலைமைச்சர் மு.க. ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான அரசியல் தலைவர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் படத்தினைப் பாராட்டினர்.
வரவேற்பு: படம் ஏற்கனவே மக்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தி இருந்ததால், தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல், வெளிமாநிலங்களிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதேபோல், வெளிநாடுகளிலும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் திரையுலகில் இருந்து இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆன மூன்று படங்களில் அதிக தியேட்டர்களில் ரிலீஸ் ஆன படம் என்றால அது அமரன் படம்தான். இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 800 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸ் ஆனது.

தியேட்டர்கள்: இது இல்லாமல் வெளிமாநிலங்களைக் கணக்கில் கொண்டால் இந்தியா முழுவதும் சுமார் 1000 முதல் 1200 தியேட்டர்களில் படம் ரிலீஸ் செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. ஏற்கனவே கூறியதைப்போல், படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்ததால், முதல் நாள் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாகவே இருந்தது. இதனால் முதல் நாளில் அமரன் படம் உலகம் முழுவதும் ரூபாய் 42.3 கோடிகள் வசூல் செய்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்தது.

வசூல்: அதேபோல் படத்திற்கு நேற்று வரை அதாவது நவம்பர் 3ஆம் தேதி வரை பல திரையரங்குகளில் அனைத்து காட்சிகளும் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாகவே இருந்தது. இதனால் படத்தின் பாக்ஸ் ஆஃபீஸ் வசூல் என்பது தொய்வில்லாமல் அமைந்தது. அதன்படி பார்த்தால், படம் நான்கு நாட்களில் சுமார் ரூபாய் 130 கோடிகளில் இருந்து ரூபாய் 135 கோடிகள் வரை வசூல் செய்திருக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகின்றது. முதல் நான்கு நாட்களில் படம் இந்தத் தொகையை வசூல் செய்திருப்பதால், படக்குழு மகிழ்ச்சியாக உள்ளது. மேலும், ஏற்கனவே குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுவிட்டதால், இன்றும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் இருக்கும் என எதிர்பார்க்கலாம். படம் விரைவில் ரூபாய் 200 கோடிகளை வசூல் செய்யும் என்ற பேச்சும் அடிபடுகின்றது.



Click it and Unblock the Notifications











