Amaran Twitter Review: வெடிக்கும் திரையரங்கம்.. இந்த தீபாவளி சிவகார்த்திகேயனதுதான்.. அமரன் விமர்சனம்
சென்னை: இந்த தீபாவளிக்கு தமிழ் சினிமாவில் மொத்தம் மூன்று படங்கள் ரிலீஸ் ஆகியுள்ளது. இதில் அதிக எதிர்பார்ப்போடு ரிலீஸ் ஆகியுள்ள படம் என்றால், அது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் படம்தான். நாட்டுக்காக வீரமரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மைய்யப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். சோனி பிக்சர்ஸ் உடன் உலகநாயகன் கமல்ஹாசன் இணைந்து படத்தினை தயாரித்துள்ளார். சாய் பல்லவி மேஜர் முகுந்த் வரதராஜனின் மனைவி இந்து ரெபேக்கா வர்ஹீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படம் இன்று வெளியாகிய நிலையில் படத்தினைப் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் பக்கத்தில் தங்களது கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். அது குறித்து இந்தத் தொகுப்பில் காணலாம்.
படம் பார்த்த ரசிகர் ஒருவர், படம் சிறப்பாக உள்ளது. சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி சிறப்பாக நடித்துள்ளார்கள். படத்தில் குறை என்று சொல்ல எதுவும் இல்லை. ஜி.வி. பிரகாஷின் இசை படத்திற்கு வலு சேர்த்துள்ளது. ஒட்டுமொத்தமாகவே படம் சிறப்பாக உள்ளது" என தெரிவித்துள்ளார். அதேபோல் மற்றொரு ரசிகர் தனது எக்ஸ் பக்கத்தில், " மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு இந்தப் படம் சிறப்பான சமர்ப்பணம். சிவகார்த்திகேயன் இந்தப் படத்திற்காக தனது உடலை மாற்றி அமைத்துக் கொண்டது திரையில் நன்கு தெரிகின்றது. சிவகார்த்திகேயனும் சாய் பல்லவியும் முகுந்த் வரதராஜன் மற்றும் இந்து ரெபேக்கா வர்ஹீஸ் கதாபாத்திரங்களுக்கு சிறப்பாகப் பொருந்திப் போயுள்ளார்கள். முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி என படம் சிறப்பாக உள்ளது. படத்தின் க்ளைமேக்ஸ் மிகவும் சென்டிமென்ட்டாக உள்ளது. தரமான படம்" எனத் தெரிவித்துள்ளார்.

மைல் கல்: மற்றொரு ரசிகர் தனது எக்ஸ் பக்கத்தில், " சிவகார்த்திகேயன் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனாகவே வாழ்ந்துள்ளார். குடும்பத்துடன் சென்று பார்க்க தரமான படம். முகுந்த் வரதராஜனை திரையில் கொண்டுவர சிவகார்த்திகேயன் மிகவும் உழைப்பைச் செலுத்தியுள்ளார் என்பதைப் பார்க்கமுடிகின்றது. இந்தப் படம் சிவகார்த்திகேயனின் சினிமா வாழ்க்கையில் மைல் கல்லாக அமையும்" எனத் தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார்: இன்னொரு ரசிகர் தனது எக்ஸ் பக்கத்தில், " இப்படம்தான் இந்த ஆண்டின் சிறந்த படமாக அமையப்போகின்றது. ஜி.வி. பிரகாஷின் இசை நமக்குள் பல உணர்வுகளைக் கடத்திவிடுகின்றது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ஜி.வி. பிரகாஷ்குமார் தொடங்கி ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் தேசிய விருதும் கிடைக்க வாய்ப்புள்ளது. அதற்கான உழைப்பினை படக்குழு வெளிப்படுத்தியுள்ளது" என தெரிவித்துள்ளார். அதேபோல் மற்றொரு ரசிகர் கூறும்போது, " தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் இருப்பதால் தமிழ் சினிமாவுக்குத்தான் பெருமை. தமிழ் சினிமாவின் அடுத்த சூப்பர் ஸ்டார் (சிறந்த நடிகர்) உருவாவதை நாம் நம் கண் முன்னே பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். இடைவேளைக்கு முன் 15 நிமிடங்கள் ஒட்டுமொத்த தியேட்டருமே வெடித்துச் சிதறும் அளவுக்கு தரமான திரைக்கதை" என பதிவிட்டுள்ளார்.

குடும்பங்கள்: "படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகளாலும் குடும்ப சென்ட்டிமென்ட் காட்சிகளாலும், நிறைந்துள்ளது. ஒட்டுமொத்தமாக படம் சிவகாத்திகேயனுக்கு மாபெரும் வெற்றியை பெற்றுத்தரும் என்பதில் சந்தேகம் வேண்டாம். இதுமட்டும் இல்லாமல், ராணுவ வீரர்களின் அன்றாட கள மற்றும் குடும்ப வாழ்க்கை குறித்து படத்தில் காட்சிப்படுத்தியுள்ளதால், குடும்பத்தோடு சென்று பார்க்கலாம். இந்தப் படம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்" எனஒருவர் பதிவிட்டுள்ளார். படத்திற்கு தமிழ்நாட்டிலும் வெளிநாடுகளிலும் நல்ல ரெஸ்பான்ஸ் வந்து கொண்டு இருப்பதால், படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











