Don't Miss!
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்...
- News
சிலருக்கு என் "போட்டோ" மீதே கவலை! ‘கியூ’வை ஒழிச்சுட்டோம் - உலகமே நம்மை பார்த்து.. எதை சொல்றார் மோடி?
- Sports
தோல்விக்கு அருகில் இந்திய அணி.. இங்கி, விதியை மாற்றிய 2 வீரர்கள்.. வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது??
- Finance
மாஸ்டர் பிளான் போட்ட சந்திரசேகரன்.. இனி ஆட்டமே வேற..!
- Automobiles
முட்டி மோதி ஆளுக்கு ஒரு இடத்தை பிடித்த டாடா, ஹூண்டாய்... அசால்டா 8 இடங்களை தட்டி தூக்கிய மாருதி!
- Technology
யாரு நம்ம Xiaomiயா இது?- தலை சுத்த வைக்கும் விலை, ஆச்சரியப்பட வைக்கும் அம்சங்கள் உடன் Xiaomi 12S Ultra!
- Travel
த்ரில் நிறைந்த ரிவர் ராஃப்டிங் – தண்டேலியில் ஒரு சாகச அனுபவம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
அஜித், விஜய் சாதிக்க முடியாததை சாதித்த சிவகார்த்திகேயன்.. வெற்றி பாதைக்கு திரும்புமா கோலிவுட்?
சென்னை: கடந்த ஆண்டு டாக்டர் படத்தை கொடுத்து ஹிட் அடித்த சிவகார்த்திகேயன் இந்த ஆண்டு டான் படத்தின் மூலம் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.
இந்த ஆண்டு வெளியான அஜித்தின் வலிமை, சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் மற்றும் விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட படங்கள் விமர்சன ரீதியாக வெற்றியை பெறவில்லை.
இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் கோலிவுட் மானத்தை மீண்டும் காப்பாற்றி உள்ளதாக ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் என பலரும் பாராட்டி வருகின்றனர்.
மனைவி -காதலிக்கிடையில் முழிபிதுங்கும் கோபி... விரைவில் மாட்டுவாரா ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

டான் நல்லா இருக்கா
அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரகனி, பிரியங்கா மோகன் மற்றும் பலர் நடித்துள்ள டான் திரைப்படத்தில் ஏகப்பட்ட குறைகள் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், அதை எல்லாம் அப்பா - மகன் பாசம் மற்றும் ஆசிரியர் - மாணவனுக்கான மோதல் உள்ளிட்ட காட்சிகள் நிறைவு செய்து ரசிகர்களுக்கு நல்ல படத்தை பார்த்தோம் என்கிற திருப்தியை கொடுத்திருப்பது தான் டான் படத்தின் வெற்றி என படத்தை பார்த்த மக்கள் கூறி வருகின்றனர்.

பெரும் எதிர்பார்ப்பு
கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு காரணமாக ரிலீஸ் ஆகாத பல பெரிய படங்கள் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே வெளியாகி கோலிவுட்டை வேறலெவலுக்கு கொண்டு செல்லும் என பலரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால், கோலிவுட்டுக்கு பதிலாக இந்த ஆண்டு கோட்டையை பிடித்தது டோலிவுட் மற்றும் சாண்டில்வுட் தான். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் நடித்த படங்கள் பெரிய வெற்றியை பெற முடியாமல் ட்ரோல் மெட்டீரியலாக மாறின.

பெயரில் மட்டும் வலிமை
இயக்குநர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானது. ஆனால், படத்தின் பெயரில் மட்டும் தான் வலிமை இருந்ததாகவும், திரைக்கதையில் அது ரொம்பவே மிஸ் ஆனதால் தான் அந்த படம் ரசிகர்களை கவரவில்லை என கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

ஏமாற்றிய எதற்கும் துணிந்தவன்
சூரரைப் போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் வெளியாகமல் தியேட்டரில் வெளியாகி இருந்தால், எதற்கும் துணிந்தவன் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கும் என்கின்றனர். அந்த இரு படங்களின் கதைகளுமே அட்டகாசமாக இருந்த நிலையில், எதற்கும் துணிந்தவன் படத்தை அந்த இரு படங்களையும் தாண்டாமல் போனது தான் பிரச்சனை என்கின்றனர்.

பில்டப் பீஸ்ட்
நடிகர் விஜய்யின் ரசிகர் பட்டாளத்துக்கு தீனி போட இயக்குநர் நெல்சன் படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை தவற விட்டு விட்டது தான் பீஸ்ட் படம் ரசிகர்களை கொஞ்சம் கூட கவர முடியாமல் போனதற்கு காரணம் என்கின்றனர். படத்தை பார்த்து விட்ட படக்குழுவினர் கேஜிஎஃப் 2 படத்துடன் போட்டியையாவது தவிர்த்து இருந்தால் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியையாவது பார்த்திருக்கலாம் என ஏகப்பட்ட விமர்சனங்கள் குவிந்தன.

சாதித்த சிவகார்த்திகேயன்
தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெளியாகும் படங்கள் எல்லாம் இப்படி சொதப்பி வரும் நிலையில், சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் சாதனை செய்துள்ளது என்றும் விமர்சகர்கள் பலரும் இந்த படத்தை பாராட்டி வருவதும், மக்கள் மத்தியில் நல்ல ரீச் படத்துக்கு கிடைத்திருப்பது மிகப்பெரிய வெற்றிப் படமாக டான் படத்தையும் மாற்றும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

வெற்றி பாதைக்கு திரும்புமா
டான் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக வரும் ஜூன் 3ம் தேதி கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத் ஃபாசில் கேமியோவாக சூர்யா நடித்துள்ள விக்ரம் படம் வருகிறது. மேலும், பிரம்மாண்ட எதிர்பார்ப்புடன் பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது. கடந்த ஆண்டு மாநாடு படத்தின் மூலம் வெற்றி கொடுத்த சிம்புவும் வெந்து தணிந்தது காடு மூலம் வெற்றியை கொடுத்தால் மீண்டும் கோலிவுட் வெற்றி பாதைக்கு திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.