ஆர்ஜே பாலாஜிக்கு பிடிக்காத அனிமல்.. அசிங்கமா டயலாக் பேசியதும் சிவகார்த்திகேயனுக்கு பிடிச்சிடுச்சா?

சென்னை: சந்திப் ரெட்டி வங்கா இயக்கத்தில் வெளியான அனிமல் திரைப்படம் தனக்கு மிகவும் பிடித்திருப்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் நடந்த சினிமா விழாவில் பேசியது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அனிமல் படம் இந்தி மற்றும் தெலுங்கில் ரசிகர்களின் வரவேற்பை பெற்று 900 கோடி வசூலை ஈட்டியது. ஆனால், தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அந்த படத்தை பல பிரபலங்களும் கேவலமான படம் என கழுவி ஊற்றினர்.

Sivakarthikeyan says he likes Animal movie very much to Sandeep Reddy Vanga and gets trolled

சந்தீப் ரெட்டி வங்கா ஆல்ஃபா மேல் படத்தை இயக்குகிறேன் என சரியான சங்கி படத்தை எடுத்து வைத்திருந்தார் என விமர்சனங்கள் கிளம்பின.

ராதிகா முதல் ஆர்ஜே பாலாஜி வரை: சமீபத்தில் ஒரு படத்தை பார்த்து வாந்தியே வந்து விட்டது. இவ்வளவு கேவலமாக ஒரு படத்தை அந்த இயக்குநர் எப்படி எடுத்தார் என்றே தெரியவில்லை என நடிகை ராதிகா சரத்குமார் அனிமல் படத்தை கழுவி ஊற்றியிருந்தார். பின்னணி பாடகர் ஸ்ரீனிவாஸ் அனிமல்களுக்காக அனிமல் இயக்கிய படம் தான் அனிமல் என அசிங்கப்படுத்தினார். ஆர்ஜே பாலாஜி பெண்களை ஷூவை நக்க சொல்லும் காட்சியெல்லாம் இருக்கும் படத்தை பார்த்து விட்டால் கூட தெரியாத்தனமாக தனது படங்களில் அதுபோன்ற அபத்தமான காட்சிகள் இடம்பெற்று விடும் என அனிமல் படத்திற்கு எதிராக பேசினார். கோட் படத்தின் ஓளிப்பதிவாளர் சித்தார்த் நுனியும் அனிமல் படத்தை விளாசினார்.

சிவகார்த்திகேயன் பாராட்டு: பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை இப்படியொரு கேவலமான படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி உள்ளாரே என்றும் பாலிவுட்டில் அந்த படத்துக்கு 6 விருதுகள் எப்படி பாஸ் கொடுத்தாங்க என்றும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனல் நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சிவகார்த்திகேயன் தனக்கு அனிமல் படம் ரொம்பவே பிடித்திருந்தது. அதில், நீங்க பயன்படுத்திய கிராஃப்ட் மற்றும் மியூசிக் வேறலெவல். அதன் பின்னர் படத்தை விட பேட்டிகளில் நீங்க போல்டாக கொடுத்த பதிலடி எல்லாம் ரொம்பவே பிடிச்சது சார் என சந்தீப் ரெட்டி வங்காவை உச்சி குளிர செய்திருந்தார்.

ஆபாச வசனம் பேசிய சிவகார்த்திகேயன்: கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் படத்தின் டீசரில் சிவகார்த்திகேயன் ஆபாச வசனம் பேசியிருந்தார். ஆரம்பத்தில் குழந்தைகள் முதல் பெண் ரசிகைகளை கவரும் சிவகார்த்திகேயனாக இல்லாமல் மாஸ் ஹீரோவாக சிவகார்த்திகேயன் மாறி வரும் நிலையில், அனிமல் படம் எல்லாம் பிடிக்கிறது எனக் கூறுகிறாரா என நெட்டிசன்கள் ஏகப்பட்ட ட்ரோல் கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

அடுத்து பிரபாஸ் படம்: அனிமல் படத்தை தொடர்ந்து பிரபாஸை வைத்து ஸ்பிரிட் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளார். அந்த படத்தில் பிரபாஸ் போலீஸ் அதிகாரியாக நடிக்கப் போகிறாராம். அதன் பின்னர் அனிமல் பார்க் படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஏ.ஆர். முருகதாஸ் படம்: அமரன் படத்தை முடித்து விட்ட சிவகார்த்திகேயன் அடுத்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். அயலான் படம் படுதோல்வியை சந்தித்த நிலையில், அமரன் படத்தின் வெற்றிக்காக சிவகார்த்திகேயன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X