Sivakarthikeyan: பராசக்தி படத்தில் நடிக்க சம்பளம் வேண்டாம்னு சொன்ன SK.. 25வது படத்தில் எடுத்த முடிவு!

சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அமரன் படத்தின் வெற்றிக்குப் பின்னர் சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை உயர்த்தி விட்டார் என்ற தகவல் உலா வருகிறது. அதாவது, அமரன் படத்திற்கு முன்னர் சிவகார்த்திகேயன் கிட்டத்தட்ட ரூபாய் 50 கோடிகள் வாங்கியதாக கூறப்படுகிறது. அமரன் கொடுத்த வெற்றி, சிவகார்த்திகேயனுக்கே பல விஷயங்களை உணர வைத்துள்ளது. அதனால் அவர் செய்துள்ள விஷயம், தமிழ் சினிமாவில், ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட டாப் கதாநாயகர்கள் செய்யாத விஷயம் என மொத்த திரையுலகமே பாராட்டி வருகிறது.

கடந்த ஆண்டு தீபாவளிக்கு அதாவது அக்டோபர் 31ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் அமரன். வீரமரணமடைந்த இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். படத்தை சோனி பிக்சர்ஸ் உடன் இணைந்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இணைந்து தயாரித்தது. படம் உலகம் முழுவதும் சுமார் ரூபாய் 350 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. தமிழ்நாட்டில் மட்டும் படம் ரூபாய் 70 கோடிகளுக்கு மேல் கிராஸ் கலெக்‌ஷன் செய்து மாபெரும் வெற்றிப் படமாக மாறியது. ஜி.வி. பிரகாஷ் குமார் படத்திற்கு இசை அமைத்திருந்தார். ஒட்டுமொத்த படக்குழுவினரும் ரசிகர்கள் பாராட்டினார்கள்.

Sivakarthikeyan Parasakthi Sivakarthikeyan Salary

சிவகார்த்திகேயன் தற்போது மூன்று படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் உடன் மதராஸி, சிபி சக்ரவர்த்தியுடன் தனது 24 வது படம், சுதா கொங்கராவுடன் தனது 25 வது படமான பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். பராசக்தி படம் இந்தி எதிர்ப்பு போராட்ட களத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. படத்தின் படப்பிடிப்பு பணிகள் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. படத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா, ப்ரித்திவ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

Sivakarthikeyan Parasakthi Sivakarthikeyan Salary

SK 25: டான் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்க கமிட் ஆகியுள்ளார். இது ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு 100வது படம் ஆகும். படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு அல்லது அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீஸ் ஆக அதிக வாய்ப்புள்ளது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு விஜய்யின் ஜன நாயகன் படம் வெளியாகவுள்ளதாக தகவல் உலா வருவதால், பொங்கலுக்கு ஜன நாயகன் ரிலீஸ் ஆனால், பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றம் இருக்க அதிக வாய்ப்பு உள்ளது.

Sivakarthikeyan Parasakthi Sivakarthikeyan Salary

சம்பளம்: இப்படியான நிலையில், பராசக்தி படத்தில் தனது சம்பளத்துக்கு பதிலாக சிவகார்த்திகேயன் வேறு ஒரு முயற்சியை கையாண்டு உள்ளாராம். அதாவது அமரன் படத்தின் வெற்றியால், சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை ரூபாய் 70 கோடிகள் வரை உயர்த்தியுள்ளார். மதராஸி படம் ரிலீஸ் ஆனால் அவரது சம்பளம் மேலும் அதிகமாக வாய்ப்புகள் உள்ளது. இப்படியான நிலையில் தனது, 25 வது படமான பராசக்தி படத்தில் சம்பளத்துக்கு பதிலாக, லாபத்தில் கணிசமான சதவீதம் பங்கு கேட்டுள்ளாராம்.

Sivakarthikeyan Parasakthi Sivakarthikeyan Salary

பாராட்டு: இவரது இந்த முடிவுக்கு தயாரிப்பு நிறுவனமும் ஓ.கே. சொல்லியதால் சிவகார்த்திகேயனுக்கு இந்தப் படம் ரிலீஸ் ஆன பின்னர் எப்படியும் சுமார் 150 கோடிகள் வரை, பங்காக கிடைக்கும் என எதிர்பார்க்கிறாராம். ஏற்கனவே பாலிவுட், தெலுங்கு சினிமாவில் அதுபோல லாபத்தில் பங்கு என பல நடிகர்கள் முடிவெடுத்து நடித்து வருகிறார்கள். இப்படியான நிலையில், தமிழ் சினிமாவில் முதல் முறையாக லாபத்தில் பங்கு கேட்டு கமிட் ஆகியுள்ள நடிகர் என்றால் அது சிவகார்த்திகேயன் தான். முன்னணி கதாநாயகர்கள் ரஜினி, கமல், அஜித் , விஜய் கூட இன்னும் லாபத்தில் பங்கு என்ற ஒப்பந்தத்திற்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sivakarthikeyan Parasakthi Sivakarthikeyan Salary

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X